கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்  செல்ல வேண்டிய திருத்தலம்…

  Ramesh   | Last Modified : 08 Dec, 2019 06:48 pm
article-about-krithika-nakshatram

கார்த்திகை நட்சத்திரம்... ‛கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என்று சிறப்பிக்கப்படும் கலித்தொகையில், குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம், அழகாக குறிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை நட்சத்திரம் பூமாலைக்கு உவமையாக குறிக்கப்பட்டுள்ளதால், பூமாலை போன்ற வடிவத்தை கார்த்திகை நட்சத்திரம் பெற்றிருக்கிறது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்,  தங்கள் தோஷங்களைப் போக்கிக்கொள்ள வழிபாடு செய்ய வேண்டிய தலம், நாகப்பட்டினம் மாவட்டம், கஞ்சா நகாத்திலுள்ள, அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். 

மூலவர், காத்ர சுந்தரேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக மேல் நோக்கி அருள் புரிகிறார். தாயார், துங்க பாலஸ்தானம்பிகை. சங்கு, சக்கரம், நீலோத்பவ மலர், கிளி ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தி,  அழகுற காட்சி தருகிறாள். 

தாயாரின் கைகளில் உள்ள கிளி, சர்வேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. இது, அவளது காதுகளில் வேதம் ஓதுவதாகவும் சொல்லப்படுகிறது.  தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திக்கொண்டிருந்த அசுரர்களை அழிக்க, பார்வதி தேவி  அக்னி வடிவம் கொண்டு, தியானத்திலிருந்த சிவ பெருமானிடம் வேண்டினாள். 

தவம் கலைந்த சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆறு ஜோதிகள்  வெளிவந்து,  அனைத்தும் ஒன்றாக சங்கமித்து அசுரர்களை அழிக்க , கார்த்திகேயனாக உருவெடுத்தது. ஆறு ஜோதிகளை உருவாக்கி சக்தி படைத்ததால் இவர்  கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். 

இவர் தான் தற்போது, ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தான் தோன்றுவதற்கு காரணமான இத்தலத்தில், கார்த்திகேயன் தினமும் வந்து வழிபடுவ தாலேயே இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய தலமாக விளங்குகிறது.
   
கார்த்திகை நட்சத்திரத்தில்  பிறந்த பெண்கள்,  ஒவ்வொரு வெள்ளிக்கிழ மையும், கார்த்திகை நட்சத்திரத்தன்றும்  துங்கபாலஸ்தானம்பிகையின்  இடது புறம்  உள்ள கிளியை தரிசனம் செய்தால்  சிறப்பான மங்கள வாழ்வு உண்டாகும். 

நீண்ட காலமாகத் திருமணத்தடை உள்ள கார்த்திகைப் பெண்கள், புண்ணியத் தீர்த்தங்களில் இருந்து நீரை கொண்டு வந்து, துங்கபாலஸ்தானம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணப்பேறு அடைவார்கள். 

இந்த தாயாருக்கு   சுமங்கலிப் பூஜை செய்வதன் மூலம் எண் ணியபடியே மணாளன் அமைவான். குடும்பத்தில்  ஒற்றுமை மேம்படவும், உறவுகளுக்குள் இருக்கும் மனக்கசப்பையும் போக்கும் அருமருந்தாக காத்ர  சுந்தரேஸ்வரர் இருக்கிறார். 
இத்தலத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி,  நவக்கிரக சன்னிதிகள் உள்ளன.
     
கார்த்திகை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  நேரம் கிடைக்கும் போதும், பிரதோஷ காலங்களிலும், கார்த்திகை நட்சத்திரத்தன்றும் இத்தலத் துக்கு  வந்து மூலவர் காத்ர சுந்தரேஸ்வரரை நினைத்து  தீபம் ஏற்றினால் தோஷங்கள் நிவர்த்தி ஆவதோடு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும்  தடையின்றி வெற்றிகரமாக நடக்கும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close