ஹோலிகா அரக்கியும்... ஹோலி பண்டிகையும்..!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 07:53 am
holika-arakki-and-holi-festival

இறைவனது அற்புதங்களை  நிகழ்த்திய நாட்கள் தான் பெரும்பாலும்  இறை வனுக்குரிய முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. அரக்கி ஹோலி காவை மஹாவிஷ்ணு பொசுக்கி  சாம்பலாக்கப் பட்ட பங்குனி பெளர்ணமியன்றுதான் வடமாநிலத்தினர் ஹோலி  பண்டிகையைச் சிறப்பாக கொண் டாடுகிறார்கள்.

உலகத்தைக் காக்கும் கடவுள் தான்  மட்டும் தான் தன்னைதான் எல்லோரும் வணங்கவேண்டும் என்னும் மமதையில் இரண்யகசிபு இருந்தான்.  அவன் சொல்வதற்கேற்ப மக்கள் அனைவரும் அவனையே வழிபட தொடங்கினார்கள். ஆனால் அவனது மகன் பிரகலாதன் தாயின்  கருவறையில் இருக்கும் போதே மஹாவிஷ்ணு நாமம் ஜெபித்து  பிறந்தவன்.   மஹாவிஷ்ணு தான் உலகைக் காக்கும் கடவுள். அவரது திருநாமத்தைத் தவிர வேறு யாருடைய பெயரையும் நான் உச்சரிக்க மாட்டேன் என்று பிடிவாதத்தோடு இருந்தான்.

ஊரெல்லாம் தன்னை வணங்கும்போது தன்னுடைய மகன் மட்டும் வணங்காமல் இருப்பதும் இரண்யகசிபுவுக்கு அவமானமாக இருந்தது.  தன்னு டைய  மகனும் தன் நாமத்தை  மட்டுமே சொல்ல வேண்டும்   அதற்கு எத்தகைய எல்லைக்கும் போகலாம் என்னும் முடிவுக்கு வந்தான் இரண்யகசிபு. நஞ்சும், கொடிய விஷம் கக்கும் பாம்புகளாலும் பிரகலாதனின் உயிரை எடுக்க முடியவில்லை. சகோதரி உருவமுறை கொண்ட ஹோலிகா என்னும் அரக்கியின் நினைவு வந்தது இரண்யகசிபுக்கு. அவளை அழைத்தான். 

”என் மகனாக இருந்தாலும் எப்போது என்னை கடவுளாக நினைக்க மாட்டேன் என்று  சொன்னானோ அப்போதே இவன் பூமியில் வாழத்தகுந்தவன் இல்லை.  இன்றைய உணவுக்கு  இவனை உணவாக உட்கொள்” என்றான். குண்டு கன்னங் களுடன், கொழு கொழு  என்று வளர்க்கப்பட்டிருக்கும்  பாலகனான பிரகலாத னைக் கண்டதும்   ஹோலிகா  அரக்கிக்கு எச்சில் ஊறியது. 

நெருப்பில் எரியாத தன்மை கொண்டவள் ஹோலிகா என்பதால் பிரகலாதனை நெருப்பில் சுடுவதற்கு கட்டளையிட்டான் இரண்யகசிபு. ஆனால்  ஆபத்பாந்தவனான மஹாவிஷ்ணு ஹோலிகாவை தீயில் பொசுக்கி  மலரை போல் பிரகலாதனை வெளியே  தள்ளினார்.

இதைக் குறிக்கும் வகையில் தான் வடமாநிலத்தில் வெட்டவெளியில் தீமுட்டி ஹோலிகா தகனம் என்று அழைக்கிறார்கள். ஹோலியின் போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைத் தூவி விளையாடுகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close