தீதும் நன்றும் பிறர் தர வாரா...!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 09:20 am
theethum-nandrum-pirar-thara-vaara

நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். அப்போதுதான் இறைவனிடம்  நல்லதை மட்டுமே கேட்க  தோன்றும். நல்லனவற்றைப்  பெறவும் முடியும். ஆனால் அடுத்தவனுக்கு  ஒரு கண் போகவேண்டும் என்று வேண்டும்போதே இரண்டு கண்களையும் இழக்கும் அபாயத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண் டும் என்பதைத் தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது,

கனகபுரி என்னும் அழகிய கிராமத்தில் செல்வம் என்பவன் வாழ்ந்து வந்தான். குறைகள் இல்லாத வாழ்க்கையை கடவுள் அவனுக்கு தந்திருந்தார். ஆனாலும் அடுத்தவர்களது சந்தோஷத்தைப் பார்த்து மனம் பொறுக்காமல் இருப்பான். ’அவனுக்கு மட்டும் இவ்ளோ பெரிய வீடு கொடுத்திருக்கிறாரே’ என்று பிறரது வசதிகளைப் பார்த்து  மனதுக்குள்  பொறுமுவான். 

ஒருமுறை காட்டுக்கு   சென்ற செல்வத்துக்கு வனதேவதை காட்சியளித்தாள்.  ”மானிடர்கள் என்னைப் பார்த்துவிட்டால் அவர்கள் வேண்டும் வரம் அளிக்க வேண்டும் என்பது இறைவன் எனக்கு விதித்திருக்கும் கட்டளை.  உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள். மறுக்காமல் அளிக்கிறேன்”  என்றாள்.  

இதுதான் சமயம் என்றவன் ”நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும்  என்னும் வரத்தை எனக்கு அளிக்க வேண்டும்” என்று வேண்டினான். ”நீ நினைப்பது நல்லதாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி நினைக்கும் அனைத்தும் உடன டியாக நிறைவேறவும் செய்யும். ஆனால் யாருக்கேனும் கெடுதல் நினைத்தால்  அவர்களுக்கு பதிலாக உனக்குத்தான் நடக்கும்  பிறகு உன் நினைப்பு எதுவுமே பலனளிக்காது” என்று  எச்சரிக்கை செய்தது. வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவ னுக்கு இது எதுவும் காதில் விழவில்லை.  சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றான்.

என்ன  உணவு இது. எப்போதும் ஒரே மாதிரியாக ருசியே இல்லாமல். வித விதமான உணவுகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். அடுத்த  நொடியே  அவன் முன்னால் விதவிதமான உணவுகள் தட்டுகளில் நிறைந்தது. என்ன சுவை என்றபடி உண்டவன்.. அப்பா... அப்படியே பஞ்சுமெத்தையில் படுத் தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தான். அடுத்த நொடியில் பஞ்சுமெத்தையில் அமர்ந்திருந்தான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. யாருக்கும் எவ்வித தீங்கும் நேராமல் இவனுக்குத் தேவையானதை மட்டும் வேண்டும்போது கேட்டது அனைத்தும் இவனுக்கு உள்ளபடி கிடைத்தது.

மனித மனம் சும்மா இருந்தால் சாத்தானுக்கு  உலைக்களமாயிற்றே. மெதுவாக அடுத்த வீட்டை எட்டிப்பார்த்தான்...  எல்லாம் கிடைத்திருக்கும்  நாம் சந்தோஷ மாக இருப்பது சரிதான். ஆனால் இவனும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தான். தேவதை சொன்னதை  மறந்தான். அவனுடைய வீடு உடனடியாக இடிந்து விழட்டும் என்று நினைத்தான். அடுத்த நொடி இவனது வீடு இடிந்து இவன் மேலேயே விழுந்தது.’ கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது போல நமது எண்ணம் நமக்கே எதிராயிற்றே என்று இறந்தான்.

’தீதும் நன்றும் பிறர்தரவாரா..’ என்பது கூட இதைப் பொறுத்துதான்...  நல்லதைப் பேசி நல்லதை நினைத்து நல்லனவற்றை மட்டுமே வேண்டுங்கள். நல்லதையே பெறுவீர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close