பகைவனிடம் அன்பு காட்டலாமா?

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 07:01 pm
love-your-enemy

நந்தியூர் என்னும் அழகிய கிராமம் ஒன்று இருந்தது. எல்லா வளமும் இருந்ததால் ஊர்மக்கள் எவ்வித குறையுமின்றி மகிழ்ச்சியாக இருந்தார்கள். விவசாயம் தான் முக்கிய தொழிலாக அங்கிருந்தது. இயற்கைகளை அழித்து வரும் கலிகாலம் ஆயிற்றே..

இயற்கை சீற்றமும் கடும் வெள்ளமும் ஒருபுறம் வந்து பயிர்களை அடித்து சென்றால் மறுபுறம்  தண்ணீரின்றி வறண்ட நிலையில் பயிர்கள் வாடியது.. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தடுமாறினார்கள்.

ஊரில்  செல் வாக்கோடு இருந்த மாணிக்கத்துக்கு மக்களின் இந்த நிலை கொண்டாட்டமாக இருந்தது. ‘யாரும் உதவி என்று நம்மிடம் வந்ததில்லையே.. வந்தால் அதிக வட்டிக்கு  பணம் கொடுத்து நிலத்தை வாங்கிவிடலாமே’ என்று நினைத்தான்.

அந்த ஊர் காவல் தெய்வம் ஐயனார் கோயிலின் அருகில் முத்துவேல் என்பவனின் நிலம் இருந்தது. வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்தவன் வறுமையைச் சந்தித்தான். அவனிடம் இருக்கும் வரை சுற்றியிருப்பவர்களையும் நன்றாக பார்த்துகொண்டான்.

அவனை நாடி வந்தவர்கள் வெறுங்கையோடு போக மாட்டார்கள். ஜயனாரின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். வாழ்வில் மகிழ்ச்சியடையும் போதெல்லாம் உற்சாகமாக ஐயனார் கோயிலில் வந்து விளக்கேற்றி ‘இப் படியே வைத்திரு ஐயா’ என்று வேண்டி செல்வான்.. அவனாலும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை. 

ஊரில் வயதான தம்பதியர் இருந்தார்கள். காய்கறிகளை பயிரிட்டு வயிற்றுப் பாட்டை பார்த்துக்கொண்டார்கள். குழந்தையில்லாத அவர்களுக்கு முத்துவேலின் ஆதரவுதான் பெரும் துணையாக இருந்தது.

விவசாயம் பார்க்க காசு தேவை என்று வறுமையிலிருந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து  செல்வத்தில் ஊறிய மாணிக்கத் திடம் நின்றார்கள்.  உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ”எனக்கே உங்களின் பாடு பார்க்கும்பொது  கஷ்டமாக இருக்கிறது.நான் உங்களுக்கு தேவையான உதவியை செய்கிறேன்” என்றபடி அதிக வட்டிக்கு எழுதி அவர்களிடம் கையெழுத்துவாங்கினான்.  

படிக்காத மக்கள் என்பதால் அவர்களும் விவரம் புரியாமல் அவன் நீட்டிய இடங்களிலெல்லாம்  கைநாட்டு வைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் வயதான தம்பதியரும் இருந்தார்கள்.

முத்துவேல் மட்டும் யாரிடமும் கையேந்தக்கூடாது. நம்மைதான் ஐயனார் காக்கி றாரே என்று அவரிடம் வேண்டினான். மழையும் சிறப்பாக பொழிந்தது. ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்து விவசாயம் செய்தார்கள்.

 இலாபமும் அதிகம் வந்தது. வய தான தம்பதியர் மாணிக்கத்துக்கு சேரவேண்டிய தொகையைக்  கொண்டு போய் கொடுத்தார்கள். ”வட்டிக்கே போதவில்லையே அசலை எப்படி கொடுப்பீர்கள்.. வேண்டுமானால் உங்கள் நிலத்தை என்னிடம் விற்றுவிடுங்கள்” என்றான். விஷயம் முத்துவேலுக்கு எட்டியது. மாணிக்கத்தை ஐயனார் கோயில் வரை அழைத் தான்.

”இப்படி செய்வது நியாயமா?  நியாயமாக நடந்துகொள்ளும் இவர்களுக்கே கடவுள் வறுமையைக் கொடுக்கும் போது... அதர்மம் என்று தெரிந்தும் தப்பு செய்கிறாயே உனக்கு என்ன தண்டனை கிடைக்கும்.. அப்படியும்  உனக்கு   நிலம் வேண்டுமானால் நீ என்னோடதை எடுத்துக்கொள்  நான் மனமுவந்து கொடுக்கிறேன்.  உன் மீது எந்த கோபமில்லை.  வாரம் ஒருமுறை என் ஐயனை வந்து பார்க்க அனுமதி மட்டும் கொடு” என்றான் அன்பு பொங்க...  மாணிக்கம் தலைகுனிந்தான். 

செல்வாக்கான மனிதன்  என்பது பணம் வைத்திருப்பவனைக் குறிக்காது. அன்பைக் கொண்டிருப்பவனைக் குறிக்கும். பகைவரிடமும் அன்பு காட்டும் குணம் கொண்டவனை பகைவனும் விரும்புவான்...  இப்படிப்பட்ட அன்பை இறை வனிடம் காட்டும்போது இறைவனும் அகமகிழ்கிறான் .. நம் அன்புக்கு...   
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close