மகம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மேன்மைபெற...!

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 04:45 pm
birth-in-magam-naksthra

ஜெகம் ஆளும் மகம் நட்சத்திரத்தைக் கொண்டவர்கள்  தங்கள் வாழ்வில்  மேன்மையைப்  பெறவும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும் வழிபட வேண்டிய தலம்  அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியில் உள்ள விராலிப்பட்டியில் இத்தலம் அமைந்திருக்கிறது.

மூலவர் மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னிதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி அம்பிகைகள் தெற்கு நோக்கி காட்சிதருகிறார்கள்.  கிரியாசக்தி, இச்சா சக்தி அளிக்கும் இந்த அம்பிகைகளை வணங்கினால் ஞான சக்தியைப் பெற்று இறைவனை அடையலாம்.

ஆனால் அம்பிக்கை மதில் ஓரத்தில் இருப்பதால் தாயாரை  சன்னிதிக்குள் எட்டிப்பார்த்துதான் வழிபடமுடியும். இத்தலத்தில் யோகிகளும் முனிவர்களும் அரூப வடிவில் சிவனை தினமும் பூஜிப்பதால் இவர்களுக்கு இடையூறு நேராமல் அம்பிகை சுவரை ஒட்டி இருப்பதாக  கூறப்படுகிறது.

இத்தலத்தின் சிறப்பு  சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் மீது மூலவர் மீது சூரிய ஒளி படுவது. காலையில் சிவன் மீது  விழும் சூரியனின்  ஒளிக்கதிர்கள் மாலையில் பைரவர் மீது விழுகிறது. இத்தலத்தில் ஒரே சன்னிதியில் இரண்டு அம்பிகைகளைத் தரிசிக்கலாம். 

சிவாலயங்களில் பொதுவாக வடகிழக்கு திசையில் அருள்பாலிக்கும் பைரவர் சிவனுக்கு எதிரில் காட்சி அளிக்கிறார். மகாலிங்கேஷ்வரர் உக்ரமானவர் என்பதோடு சக்தி மிக்கவர் என்பதால் பக்தர்களைத் தாக்காமல் இருக்க பைரவரை பிரதிஷ்டை செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

பைரவருக்கு பின்புறம்  தலைக்கு மேலே இருக்கும் துளையின் வழியாக  சிவனை பார்த்து பிறகு பைரவரை வணங்கி ஆலயத்துக்குள் செல்கிறார்கள்.

இராமர், சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய போது  ஆஞ்சநேயருடன் தேவகுருவின் புத்திரர் பரத்வாஜரைச் சந்தித்தார். அப்போது  தனக்கு உதவியாக இருந்த ஆஞ்சநேயரை கெளரவிக்கும் நோக்கில்  தனக்கு இலையில் உணவு பரிமாறிய போது… இலையின் நடுவில் கோடு போட்டு ஒரே இலையில் ஆஞ்சநேயரையும் உணவு உண்ணும்படி கூறினார்.

 அதனால்தான்  வாழை இலையில் நடுவில் கோடு வந்ததாகவும் சொல்வதுண்டு.  ஐந்துமுனிவர்கள் இணைந்து மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்தார்கள். அவர்களுள் பரத்வாஜ முனிவரும் ஒருவர்.   பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக இத்தலபுராணம் தெரிவிக்கிறது.

பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தை உடையவர் என்பதால் மாதந்தோறும் மகம் நட்சத்திரத்தன்றும், மாசி மகம் அன்றும்  இறைவனுக்கு  சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் செய்யப்படுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோஷங்கள் நீங்கவும்,   பிணிகள் அகலவும் சிவன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பாக இருப்பார்கள். வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பவர்கள் குறைகள் நீங்க சிறப்பு பூஜை செய்வது இங்கு விசேஷம்.

தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்… 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close