சுவாதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 10:34 pm
thaathireeswarar-kovil

சுவாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களையும் தோஷங்களையும் நீக்கிட செல்ல வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லியில் இருந்து 8 கி.மீட்டர் சென்றால் சித்துக்காடு என்னும் ஊரில் இருக்கும் அருள்மிகு தாத்திரீஸ்வரர்  கோவில்.
சித்தர்கள் வாழ்ந்த  காடு. இன்னும் அரூபமாகவே இருக்கிறது. சித்தர்கள் வாழ்ந்த இடம் இது.  குறிப்பாக  படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் இங்கு தவம் செய்யும் போது இக்காட்டில்  இருந்த நெல்லிமரத்தின் கீழ்  சிவலிங் கத்தை உருவாக்கி நெல்லியப்பர் என்று அழைத்தார்கள். தாத்திரீஸ்வரர் என்றால் சமஸ்கிருதத்தில் நெல்லி என்று பெயர். சித்தர்கள் தவம் இருந்ததன்  காரண   மாகவும்,  காடு போன்று இருந்ததாலும் இது சித்தர்காடு என்றழைக்கப்பட்டது. நாளடைவில் இது சித்துக்காடு என்று மருவிவிட்டது.

இங்கு மூலவர் தாத்திரீஸ்வரர். தாயார் பூங்குழலி. இங்கு சிவனுக்கு அருகில் உள்ள நந்திசாந்தமாக மூக்கணாங்கயிறு இல்லாமல் காட்சியளிக்கிறது. பிரகாரத் தில் ஆதிசங்கரர், மகாலட்சுமி, சரஸ்வதி சன்னிதிகள் உண்டு. கோயில்களில் இருக்கும் தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உண்டு. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி  சித்தரின் சிற்பமும், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா  சித்தரின் சிற்பமும்  உள்ளன. பிராண சித்தர்  பக்தர்களுக்கு  உயிர் காக்கும் காப்பாளனாக இருந்து அருள்புரிகிறார்.

இக்கோயில் திருப்பணி நடக்கும் போது  இத்தலத்தின் பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைத்தது. பூந்தோட்டத்தில் கிடைக்கப் பெற்றதால் அம்மன் பூங்குழலியாக பெயர் பெற்றாள். இவளுக்கு இங்கு தனிசன்னிதி உண்டு.

நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கியிருக் கிறது. சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன்  மூன்று பேரிடம் இருக்கும் பீஜாட்சர சக்திகள் சுவாதி என்னும் சொல்லில் நிறைந்திருக்கிறது. அதனால் தான் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சிவன், விஷ்ணு இணைந்து அருள்பாலிக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.

திருமணத்தடை இருப்பவர்கள் அம்மனுக்கு பச்சைவஸ்திரம் சாற்றி, வளையல் அணிவித்து வழிபடுகிறார்கள். தாத்திரீஸ்வரருக்கு நெல்லிச்சாறு, நெல்லிப்பொடிமற்றும் பால் அபிஷேகம் செய்கிறார்கள். திருக்கார்த்திகையின் போது சிவன் சன்னிதியில் 27 நட்சத்திரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் நேரம் கிடைக்கும் போது அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று சித்துக்காடு வந்து தாத்தீரீஸ்வரரையும், பூங்குழலியையும் வணங்கினால் தோஷங்கள் நீங்கி வளம் பெறுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close