தெய்வம் இருப்பது எங்கே.....?

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 10:40 pm
where-is-god

இருக்கும் இடம் தான் இறைவனின் அன்பை  தீர்மானிக்கிறது...தூணிலும் இருப்பான்  சிரு துரும்பிலும் இருப்பான் இறைவன் என்று பிரகலாதன் போல் பல கதைகள் புராணங்களில் உண்டு. ஆனாலும் சிலருக்கு இறைவனின் இருப்பிடத் தில் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.  இறைவன் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று  சொல்பவர்கள் மனதையும் அழுக்கில்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அழுக்கு என்பது வஞ்சம், வன் மம், துரோகம், பேராசை, ஏமாற்றுதல், புறம் பேசுதல் போன்றவையே ஆகும். இறைவனுக்கு தேவை தூய்மையான அன்பு என்பதை இக்கதையின் மூலம் அறியலாம். 

நல்லாவூர்  என்னும் ஊரில்  அப்பாவி ஒருவன் இருந்தான்.  தாய் தந்தை யாரு மின்றி தனியாக வாழ்ந்துவந்தான். அவனுக்கு எல்லாமே ஊர் மக்கள் தான். ஊர் மக்கள் சொல்லும் வேலையை செய்து அவர்கள் தரும் உணவை உண்டு வாழ்ந் தான்.  வேலை வெட்டி எதுவுமில்லாமல் ஆதரவு இல்லாமல் தனியாளாக இருந்த  தால் அவன் செல்லாக்காசு என்றே அனைவராலும் அழைக்கப்பட்டான். அவனை தீண்டத்தகாதவனாக ஒதுக்கி ஊருக்கு வெளியே  சிறிய குடிசை கட்டி கொடுத் தார்கள். அவர்களுக்கும் வேலை ஆகவேண்டுமே..

ஒருமுறை சந்தைக்கு சென்று மக்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி  காட்டுவழியில் வரும்போது  இளைப்பாறுவதற்காக மரத்தின் அடியில் அமர்ந் தான். அங்கு கிருஷ்ணர் ராதாவோடு இணைந்த  சிலை  ஒன்று கேட்பாரற்று   தூசிப்படிந்து கிடந்தது. நம்வீட்டில்தான் சாமி இல்லையே நாம் எடுத்து செல்வோம் என்று வீட்டுக்கு எடுத்து சென்றான். 

வழியெங்கும் ஒரே சந்தோஷமாக காணப்பட்டான். என்ன செல்லாக்காசு ஒரே சந்தோஷமாக இருக்கிறாய் போல என்று வழிநெடுகிலும் கேட்டார்கள். எல் லோருக்கும்  ஒரே மாதிரியான பதிலைச் சொன்னான். ”எனக்கு யாருமில்லை என்று சொன்னீர்களே.. இப்போது என்னை பார்த்துக்கொள்ள கிருஷ்ணனே வந்து விட்டார்” என்றான். ஊர்மக்கள் கொக்கரித்து சிரித்தார்கள். ”சாமி கோயிலில் மட்டும்தான் இருக்கும்.. உன் கைகளில் கிடைத்ததால் அதன் புனிதம்  கெட்டு விட்டது. இறைவன் வேறு இடத்திற்கு குடிகொண்டு விட்டார்” என்று  பெரியவர் களும், பெண்களும் ஒரே மாதிரி சொன்னார்கள். ஆனாலும் அதைப் பற்றியெல் லாம் கவலைப்படாதவன் கிருஷ்ணன் ராதையை ஓடும் நீரில் வைத்து குளிப்பாட்டி காட்டு அரளியால் மாலை கட்டி வழிபட்டு வந்தான்.  ஊர்மக்கள் அவ னுக்கு தரும் உணவையே நைவேத்தியமாக படைத்து சாப்பிட்டான். 

ஒருநாள்   அவன் வைத்த உணவின் அளவு குறைந்திருந்தது… ”கிருஷ்ணர் என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்” என்று மகிழ்ந்தான். தினமும் இது வழக்கமாயிற்று. ஊர்மக்கள் அனைவரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்து போனான். போடா செல்லாக்காசு… தினமும் சுத்தம் செய்து பூஜையும் புனஸ் காரமும் நெய் விட்டு பொங்கலும் செய்து கிருஷ்ணனை வணங்குகிறோம். அங்கு வராத கிருஷ்ணன் உன்னிடம் வந்துவிட்டானா” என்று பொருமினார்கள். ”நீங்கள் வந்தால் நான் நிரூபிக்கிறேன்” என்று  அனைவரையும் அழைத்துச் சென்று தட்டில் உணவு நிறைத்து வைத்தான்… எல்லோரையும் வெளியில் அழைத்து வந்து சற்று நேரம்  கழித்து உள்ளே அழைத்துச் சென்றான். 

தட்டில் உணவு குறைந்தது. அப்போதும் நம்பாத ஊர்மக்கள்.. கேலியாக அவனை சாடினார்கள். ஆனால் அபோது அசரீரி ஒன்று கேட்டது. ”இவர்க ளெல்லாம் கடவுளிடமே நம்பிக்கையில்லாதவர்கள். இவர்களை எதற்கு அழைத்து வந்தாய். உன் நம்பிக்கைதான் என்னை உன்னுடன் இருக்க வைத் தது… சுத்தம்  என்று சுற்றியிருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் இவர்கள் என் மீதான அன்பையும் நம்பிக்கையையும் சுத்தமாக வைக்க வில்லை என்பதே உண்மை…” என்று மறைந்தது. மகிழ்ந்தான் செல்லாக்காசு.. உணர்ந்தார்கள் ஊர்மக்களும்.. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close