சப்த கன்னியர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

  டேவிட்   | Last Modified : 31 Mar, 2019 10:44 pm
swaptha-kanniyargal

அசுர சக்திகளை அழிக்க ஏழு வடிவங்களை எடுத்து வந்தாள் பார்வதி தேவி என்று தேவி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் தெய்வங்களின்  இணைகள் சப்தமாதர்கள் என்னும் பெண் தெய்வங்களாக உருமாறி அசுரர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகிறது.

சண்ட முண்டர் என்னும் அரக்கர்கள் தவத்தின் பயனாக  ஆண் பெண் இணை வின்றி, கருப்பையில் உருவாகும் குழந்தையால் தங்களுக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்னும்  வரத்தை வாங்கினார்கள்.  கண்ணில் பட்ட தேவர்களையும் முனிவர்களையும் விடாமல் துன்புறுத்தினார்கள். 

பார்வதி தேவியின் அன்பை பெற்ற காத்தியாயன முனிவரை கொடுமை செய்யும் போது பொங்கியெழுந்த பார் வதி தேவி... அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அசுரக் கூட்டத்தை ஒழிக்க  7 கன்னியர்களை உருவாக்கினாள்.  இவர்களே சப்த கன்னிகள், சப்த மாதர்கள், சப்த மங்கையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ப்ராம்மி, மகேஷ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான 7 கன்னிகைகள் சப்த கன்னிகள் ஆவார்கள். 

ப்ராமி: அம்பிகையின்  முகத்தில் இருந்து  முதலாவதாக வந்த தேவியே ப்ராமி என்றழைக்கப்படுகிறாள்.மேற்கு திசையின் அதிபதியாக இருக்கிறாள். பிரம்மனின் அம்சமானவள்.

மகேஸ்வரி: அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. மகேஸ் வரனின் சக்தியானவள் இவள். வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர் வகித்து வருகிறாள்.

கெளமாரி: கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக் கடவுள். ஈச னும் உமையாளும் அழிக்க இயலாதவர்களை அழித்த முருகக் கடவுளின் அம்ச மானவள் இவள்.

வைஷ்ணவி: அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். வராஹி: சப்தகன்னிகளில் வித்தியாசமானவள். பன்றி முகத்தைக் கொண்டவள். வராகம் என்பது  பன்றியின் அம்சமானது.விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று.

சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவள்.

இந்திராணி:  இந்திரனின் அம்சமானவள்.

சாமுண்டி தேவி: ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி பத்ரகாளியாக  வந்தவள் சாமுண்டியாக சாந்தமானாள். சப்த கன்னிகளில் சர்வ சக்திகளைக் கொண்டிருப்பவள்

பழமையான சிவாலயங்களில்  தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு முன்பாக சப்த மங்கையர்கள் இருப்பார்கள். வலது காலை தொங்கவிட்டு... இடது காலை மடக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் வரிசையாகவோ தனித்தனியாகவோ சப்தகன்னி யரின் சிற்பங்கள் அருள்பாலிக்கின்றன. கிராமங்களில் ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள்  போன்ற இடங்களில் இவர்களில் ஒருவர் வழிபாட்டுக் குரிய தெய்வமாக வேறு பெயரில் இருக்கிறார்கள்.  குலதெய்வம் தெரியாதவர் கள் சப்தகன்னியர்களில் ஒருவரை குலதெய்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

சப்தகன்னியர்களை வணங்கினால்  மனதில் இருக்கும் சங்கடங்கள் விலகும் என்பது ஐதிகம். அதனால் இனி ஆலயங்களில் சப்த கன்னிகளைப் பார்த்தால் வழிபட்டு வாருங்கள்... வாழ்வில் மேன்மை அடைவீர்கள். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close