இறைவன் அறியாதது ஏதும் உண்டா..?

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 03:40 pm
god-knows-everything-story

உனக்கும் எனக்கும் தெரிந்த ரகசியம் என்று யாரிடம்  ரகசியத்தைப் பகிர்ந்தாலும்  இறைவன் அறியாத  ரகசியம் என்று எதுவுமேயில்லை என்பதை உணர்த்தும் கதை இது. 

ஒருமுறை பாஞ்சாலியின்  வீட்டில்  கெளரவர்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது.கெளரவர்களை வரிசையாக உட்கார வைத்து பரிமாறிக்கொண்டிருந்தாள் பாஞ்சாலி. துரியோதனனுக்கு பாண்டவர்களை அவமானப்படுத்தியே ஆக வேண்  டும் என்ற வெறி இருந்துகொண்டே இருக்கும். அன்று பாஞ்சாலி மாட்டிக் கொண்டாள். பாஞ்சாலி துரியோதனனுக்கு பரிமாறும்  முறை வந்தது.. துரி யோதனன் சிரித்துக்கொண்டே ”பஞ்ச பாண்டவர்களின் ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை?” என்று கேட்டான்.. சூழ இருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். பாஞ்சாலி கண்கள் கலங்க உள்ளே ஓடிவிட்டாள்.  நடந்ததைப்  பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் பாஞ்சாலியைப்பின் தொடர்ந்தார்.

”அழாதே பாஞ்சாலி..துரியோதனன் உன்னை அனைவர் முன்பும் அவமானப்படுத்த வேண்டும் என்று சீண்டுகிறான். மீண்டும் போய் அவனுக்குப் பரிமாறு அவன் மீண்டும் உன்னை சீண்டி வம்பிழுத்தாள் இன்று தக்ஷனின் முறை என்று சொல்லு.. அவன் எதுவும் பேசமாட்டான்” என்றார். பாஞ்சாலியும் தலையை ஆட்டியபடி துரியோதனன் முன்பு வந்தாள். மீண்டும் அதே கேள்வியைக் கேட் டான் துரியோதனன்.  ”இன்று தக்ஷனின் முறை” என்று கூறியபடி பரிமாறிவிட்டு அடுத்த இலைக்குச் சென்றாள்.

துரியோதனன் முகம் சுண்ட அவ்விடத்தைக் காலி செய்தான்.  என்ன காரணம் கண்ணா? ஏன் துரியோதனன் சென்றுவிட்டான். யார் இந்த தக்ஷன் என்று புன்னகையுடன் கேட்டாள். பாம்புகளின் அரசன்  தக்ஷன்.. துரியோதனன் திருமணம் முடிந்தும்  மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருந்தான். அவன் மனம் முழுவதும் பழி வாங்கும் உணர்ச்சியே மிகுந்திருந்தது. துரியோதனன் மனைவி கணவன் மேல் அளவற்ற காதல் கொண்டிருந்தாள்.முனிவர் ஒருவர் மகிமை மிக்க மூலிகைவேரை பாலில் விட்டு கொடுத்தால் துரியோதனன் மனைவி மீது மோகம் கொள்வான் என்று துரியோதனனின் மனைவி பானுமதிக்கு கொடுத்தார். பானுமதியும்  அதைப் பாலில் சேர்த்து காய்ச்சி துரியோதனனுக்கு கொடுத்தாள்.

மது மயக்கத்தில் இருந்த துரியோதனன்  பாலை  தட்டிவிட்டான். பாம்புகளின் அரசனான தக்ஷன்  பாலை குடித்து பானுமதியின் மீது வசியமானான். அவளை அடைய துடித்தான். பதி விரதையான பானுமதி துடித்தாள். அழுதாள். மனைவி யின் கற்பு நெறியை உணர்ந்த துரியோதனன் தக்ஷனிடம் வந்து தன் மனைவியை விட்டுவிடும்படி கெஞ்சினான். தர்மத்துக்கு உட்பட்டு வாழ்ந்த தக்ஷன் ”பெளர்ணமி நாள்களில்  நான் இங்குவருவேன். என்னைக் காண பானுமதியும், அவள் கற்புக்கு சொந்தமான நீயும் என்னை வழிபட வேண்டுமென்றான்.” இந்த ரகசியத்தை  தெரிந்தவர்கள் இவர்கள் மூவர் மட்டுமே. ஆனால் பாஞ்சாலிக்கு எப்படி தெரியும் என்று  ஆச்சரியத்தால் துரியோதனனின் முகம் வெளிறிவிட்டது. தீயவர்கள்  தீங்கே செய்தாலும் பாண்டவர்களுக்கு  உடன் இருந்து உதவ கண்ணன் இருந்தார்.

இறைவன் அறியாத ரகசியம் நம் வாழ்விலும் இல்லை என்பதை உணர்ந்து தீமையை ஒதுக்கியே வையுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close