அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...!

  தனலக்ஷ்மி   | Last Modified : 02 Apr, 2019 02:38 pm
anusham-star-is-the-right-to-go-to-temple

27 நட்சத்திரக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தோஷங்கள் நீங்கி பரிகாரம் செய்திட அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திக்குரிய திருத்தலத்துக்கு சென்று வழிபட்டு மேன்மையடையலாம் என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநின்றியூரில் வீற்றிருக்கும் மகாலட்சுமீஸ்வரர்... 

ஜமதக்னி மகரிஷி  கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு  மயங்கிய தன் மனைவி ரேணுகாவின் தலையை வெட்டும்படி பணித்தார். தந்தையின் சொல்லை தட்டாமல் தாயின் தலையைச் சீவினாலும் மீண்டும் தாயை உயிர்ப் பிக்கும்படி தந்தையிடம் வேண்டினான். அவரிடம் வரம்பெற்று தாயை உயிர்த்தெழ செய்தான். பித்ருதோஷம் தாக்காமல் இருக்க இத்தலத்தில் வந்து வழிபட்டார்.

தம்மையும் தோஷம்  தாக்காமல் இருக்க ஜமதக்னி மகரிஷியும்  இத்தலத்து சிவனிடம் வேண்டினார். தந்தைக்கும் மகனுக்கும் காட்சி தந்த சிவப் பெருமானை மகாலட்சுமியும் வேண்டியதால் இத்தலத்து சிவன், மகாலட்சுமீஸ்வரர் ஆனார். பரசுராமர் வழிபட்ட சிவன் பரசுராமராகவும், ஜமதக்னி  மகரிஷிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராகவும் அருள் பாலிக்கிறார்.

சிதம்பரம் நடராஜரைத் தரிசித்து வந்த சோழமன்னன் ஒருவன் இத்தலம் வழியாக சென்று திரும்புவான். ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் காவலாளிகள் கையில் உள்ள தீவட்டி  அணைந்து அந்த இடத்தைக் கடந்த பிறகு எரியத் தொடங்கும். எவ்வளவோ முயற்சி செய்தும் மன்னருக்கு இதற்கான காரணம் கண்டறியமுடியவில்லை. அங்கிருந்த இடையனிடம்  அந்த இடத்தைப் பற்றி விசாரித்தான். ”ஆமாம்... நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்  பசுக்களை அழைத்து வரும்போது தானாகவே மடியிலிருந்து பால் சொறியும்” என்றான்.

அந்த இடத்துக்குச் சென்று ஆராய்ந்த போது அங்கிருந்த சிவலிங்கம் மன்னனின் கண்களில்பட்டது. அதனை வெளியே எடுக்க முயற்சித்தும் முடியாததால் அனுஷம் நட்சத்திரத்தன்று அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனாலேயே அனுஷம் நட்சத்திரத்துக்குரிய தலமாக இது மாறியது.

மூலவர் மகாலட்சுமீஸ்வரர். சுயம்பு லிங்கமாக தோன்றியது. தாயார் உலகநாயகி. தல விநாயகர் செல்வகணபதி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னிதி உண்டு. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வள்ளி, தெய்வானை உடன் முருகன்  மயில் வாகனத்துடன் அருள்பாலிக்கிறாள். நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும்  நேருக்கு நேர் பார்த்தப்படி வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள். 

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தான் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று இத்தல இறைவனுக்கு சந்தன காப்பிட்டு  சிறப்பு வழிபாடுகள் செய்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close