மூலநட்சத்திரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்....

  தனலக்ஷ்மி   | Last Modified : 04 Apr, 2019 10:07 pm
moola-nakshtra-worship-of-the-temple

கலைமகளான சரஸ்வதி தேவிக்குரிய  நட்சத்திரமும், ஆஞ்சநேயரின் நட்சத்திரமும் மூல நட்சத்திரமே. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது நேரம் கிடைக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு புஷ்பகுஜாம் பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வாழ்வில் நன்மை அடையலாம். 

மூலவர் சிங்கீஸ்வரர், தாயார் புஷ்பகுஜாம்பாள், சிவன் சன்னிதியின் முன்பு ஆஞ்சநேயர் சிலை உள்ளது. வீணை வாசிக்கும் ஆஞ்சநேயராக அருள் பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சகிதம் முருகன், ஆதிகேசவ பெருமாள் பூதேவி, ஸ்ரீ தேவியுடன் அருள்பாலிக்கிறார். கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர், வட கிழக்கு மூலையில் வீரபாலிஸ்வரர் சன் னிதிகள் அமைந்திருக்கின்றன. இங்கிருக்கும் துர்க்கை அம்மன்  திருவடியில் மகி ஷன் உருவம் பொதிந்துள்ளது. கன்னிப்பெண்கள் ராகுகாலத்தில் விளக்கேற்றி இவளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதிகம்.

திருவாலங்காட்டில் சிவப்பெருமான் ஆனந்த தாண்டவமாடியபோது சிங்கி என்னும் நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். இசையின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் அவர் கண்களை மூடியபடி மிருதங்களத்தில் லயித்து வாசிக்க சிவப் பெருமானின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது.  

சிவனது ஆனந்த தாண்டவம் முடிந்த போது தன்னுடைய இசை வாசிப்பை நிறுத்தியவருக்கு சிவனது தாண்டவத்தைக் காணமுடியவில்லையே என்னும் கவலை ஏற்பட்டது. உடனடியாக சிவப்பெருமானிடம் தன்னுடைய கவலையைத் தெரிவித்தார். அவ ருடைய இசைபக்தியை மெச்சிய சிவன் மெய்ப்பேடு என்னும் தலத்துக்கு வருமாறு கூறினார். சிங்கி நந்திதேவர் அங்கு வந்து அங்கிருந்த லிங்கத்துக்குப் பூஜை செய்யும் போது  அவர் முன் தோன்றி நடமாடினார் சிவப்பெருமான். சிங்கியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு இத்தலத்துக்கு சிவப்பெருமான் வந்ததால் இவர் சிங்கீஸ்வரர் ஆனார்.

சரஸ்வதி தேவி மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண் தாமரை தண்டினால் சிங்க நாத  பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்கவும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை தைரியமாக எதிர்கொள்ளவும்.. துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் இத்தலத்து சிங்கீஸ்வரனைச்  சரணடையலாம்.

திருமணத்தடை, குழந்தைப்பேறைத் தீர்த்து வைக்க துர்க்கை அம்மனும், இசைத் துறையில் சாதனை புரிந்திட வீணை ஆஞ்சநேயரும் உதவுவார்கள்...                                                                                                                                                                                                                                                                           

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close