பூராடம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...

  தனலக்ஷ்மி   | Last Modified : 05 Apr, 2019 03:14 pm
pooradam-nakshtra-person-which-temple-go

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிபதியாக விளங்குபவர் ஆகாசபுரீஸ்வரர். எனவே பூராடம் நட்சத்திரக்காரர்கள் நேரம் கிடைக்கும் போது அல்லது தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடுவெளி என்னும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆகாசபுரீஸ்வரரை அணுகலாம். வாழ்நாளில் ஏற்படும் துன்பங்களை நீக்கவும், மேன்மை அடையவும் இத்தல இறைவனின் அருளை வேண்டலாம். 

மூலவர் ஆகாசபுரீஸ்வரர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கு அதிபதியாக இருப்பதால் இத்தல இறைவன் ஆகாசபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தாயார் மங்களாம்பிகை. பக்தர்களுக்கு மங்களகரமான வாழ்வை தருபவள் என்பதால் மங்களாம்பிகை ஆனாள். தேவதைகளும், வாஸ்துபகவானும் பூராட நட்சத்திர தினத்தன்று ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதிகம். சிவாலயத்தில் கோபுரத்திற்குள் அமைந்திருக்கும் நந்தி இத்தலத்தில் மட்டுமே கோபுரத்துக்கு வெளியே அமைத்திருப்பது விசேஷம்.

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலமாக இது விளங்குகிறது. கடுவெளி என்றாள் பரந்தவெளி என்று பொருள். இந்த கடுவெளிச்சித்தர் மக்களுக்கு ஞானத்தைப் போதித்தார். இவர் சிவனைக் காண வேண்டும் என்று தவம் இருந்தார். அவரது தவத்தின் பயனாக இத்தலத்திலேயே சிவப்பெருமான் கடுவெளி சித்தரின் முன்பு தோன்றி அருள்புரிந்தார்.

அப்போது நந்தி வெளியே இருந்தார். அதனாலேயே கோபுரத்து வெளியே நந்தி காட்சி தருகிறார். சித்தருக்கு காட்சிதந்த சிவபெருமான் சித்துக்களில் வல்லமை பெறும் சக்தியை அளித்தார். சித்தருக்கு அருளிய இந்த இடத்தை சோழ மன்னன் கோவிலாக்கினான். சித்தரின் சிலை சமீபத்தில் கிடைத்ததால் கோயில் முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளது. 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் தோஷங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றி கொள்ள ஆகாசபுரீஸ்வரருக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, நறுமண மலர்களை அணிவித்து நைவேத்யம் செய்து வணங்கி வழிபாடு செய்வது நல்லது.... 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close