உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்

  தனலக்ஷ்மி   | Last Modified : 06 Apr, 2019 02:57 pm
uttradam-nakshtra-person-which-temple-go

ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். நட்சத்திரங்களில் முதன்மையானதாகவும், மூத்த நட்சத்திரமாகவும் இருப்பது உத்திராடம் நட்சத்திரம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி ஊரில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம்....பிரம்மா பூ சூட்டி வணங்கியதால் இத்தலம் பூங்குடியாக அழைக்கப்பட்டு பிறகு மருவி கீழப்பூங்குடி ஆனது. இத்தல இறைவி பூங்குடியாள் என்றும் அழைக்கப்படுகிறாள். 

நான்முகன் பிரம்மனுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தது. சிவனைப் போன்றே தனக்கும் ஐந்து தலை என்பதால் பிரம்மனுக்கு தலைக்கனம் உண்டானது. பிரம்மனின் தலைக்கனத்தைப் போக்க சிவப்பெருமான் பிரம்மனின் தலையைக் கொய்துவிட்டார். தவறை உணர்ந்த பிரம்மா  சிவனை பூஜித்து பாவம் போக்கி கொள்ள பூலோகத்துக்கு வந்து சிவாலயங்களில் பூஜை செய்தார்.

இந்த இடத்தில் பிரம்மனுக்கு சிவன் காட்சி தந்ததால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். இறைவி பிரம்ம வித்யாம்பிகை என்றும் அழைக் கப்படுகிறாள்.  காலப்போக்கில் இக்கோயில் அழிவை சந்தித்தாலும் பிறகு புதிதாக எழுப்பப்பட்ட இக்கோயிலில் இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி  மீனாட்சி என்று அழைக்கப்படுகிறாள். 

இறைவி மீனாட்சி என்றழைக்கப்படும் பூங்குடியாள் உத்திராடம் நட்சத்திரத்தைக் கொண்டிருப்பதால் எஞ்சிய நட்சத்திர தேவதைகள் இத்தல இறைவிக்கு பாத பூஜை செய்வதாக ஐதிகம். பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் இறைவிக் குரிய உத்திராடம் நட்சத்திரத்தன்று வந்து வணங்கினால் எண்ணம் போல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் சிறப்பு  நடராஜர்   அள்ளி முடிந்து  ஆடுவதற்கு  ஜடாமுடியுடன் தயாரான நிலையில் தனிச்சன்னிதியில் அமைந்திருப்பது.

ஐந்து நிலை கோபுரமும் கோபுரம் எதிரே  தீர்த்தமும் கொண்டு விளங்குகிறது இத்திருத்தலம்.  ஒவ்வொரு பெளர்ணமியிலும் சிவனுக்கு விசேஷ பூஜைகள் உண்டு. அம்பாளுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர இரவிலும்,  பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும், லிங்கோத்பவருக்கு திருக்கார்த்திகையிலும் விசேஷ பூஜைகள் உண்டு.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் தங்களுக்கு ஏற்படும்  நிவர்த்தி செய்து கொள்ள இத்தல இறைவனையும் குழந்தைப்பேறு மற்றும் குடும்பத்தில்  ஒற்றுமை ஏற்பட இத்தல இறைவியையும் வழிபட்டு வேண்டியதைப் பெறலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close