மரண திசையை மாற்றி அமைக்கும் முடி காணிக்கை...

  தனலக்ஷ்மி   | Last Modified : 07 Apr, 2019 09:04 pm
donation-of-hair-tribute-to-change-the-direction-of-death

கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான்  மொட்டை போட்டேன் என்று சொல்வார்கள். முடி வளர்றதலாதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட் டுவியா என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் முடி காணிக்கை என்பது  மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?

மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.

இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான். குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.

யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்தாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை.  அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.

அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி  வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரணதிசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம்  மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். தலை போகும் பேராபத்திலிருந்தும்  தப்பித்துக்கொள்வீர்கள்

பிறந்த குழந்தைக்கு 1,3, என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து  மொட்டை அடிப்பது வழக்கம். விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.

இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.

விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்யமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close