அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 11:07 pm
pramma-gananapureeswarar-kovil

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர்  மாவட்டத்திலுள்ள கீழக் கொருக்கை ஊரில் வீற்றிருக்கும்  பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம். 

கோரக்க சித்தர் இத்தலத்து மடத்தில் ஒருமுறை தங்கியிருந்தபோது பெண் ஒருவரது சேலைத்தலைப்பு தன் மேல் கிடப்பதைக் கண்டு மனம் பதைத்து.... தன்னுடைய இருகைகளையும் வெட்டிவிட்டார். இறகு இத்தலத்தில் இருக்கும்  சந்திர புஷ்கரணியில் நீராடி இத்தல இறைவனை வணங்கிவந்தார். இவரது பக்தி யில் மெச்சிய சிவப்பெருமான்  கோரக்க சித்தருக்கு  மீண்டும் கைகளை கொடுத் தார். கோரக்கரின் கை வெட்டப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் கோரக்கை ஆனது.... கோரக்கர் தனது குறுகிய கைகளால்  பூஜை செய்ததால் இத்தலம் குறுக்கை என்று வழங்கப்பட்டு கீழக்கொருக்கை ஆகிவிட்டது.

மூலவர்  பிரம்மஞான புரீஸ்வரர்.. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவி புஷ்பவல்லி. இறைவனுக்கும் இறைவிக்கும் எதிரில் இருக்கும் இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு. பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன்,  இரட்டை பைரவர்,  தட்சிணா மூர்த்தி, சூரியன், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், துணையுடன் நந்தி பக வான்  சன்னிதி  அமைந்துள்ளது.

பிரம்மனிடம் இருந்து அசுரர்கள் வேதத்திரட்டுகளைத் திருடி கடலுக்கடியில் ஒளித்துவைத்தார்கள். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் தரித்து அதை மீட்டுத்தந்தார். வேதத்திரட்டு கிடைத்த மகிழ்ச்சியில்  பிரம்மன் மீண்டும் படைப்பு தொழிலில் ஈடுபட தொடங்கினான். ஆனால்  இயல்பாக ஈடுபட முடியவில்லை... மீண்டும் விஷ்ணுவிடம் முறையிட சென்றார். விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலத் துக்கு வந்து சிவப்பெருமானை வணங்கி அங்கபிரதட்சணம் செய்துவந்தார். ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று சிவன் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து பிரம்மனுக்கு ஞானம் அளித்தார். பிரம்மா மீண்டும் படைப்புத்தொழிலில்  கவனம் செலுத்தினார். பிரம்மனுக்கு காட்சி தந்ததால் ஞானபுரீஸ்வரர் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.

பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று சிவன் ஞானம் அளித்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்துக்குரியதாயிற்று. துன்பத்தையே தலையெழுத்தாக கொண்ட அவிட்ட நட்சத்திரத்துக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் தன்று அல்லது அவிட்ட நட்சத்திரத்தில் இத்தல இறைவனை வணங்கினால்  வாழ்வில் எல்லாமே வளமாக கிடைக்கும் என்பது ஐதிகம். எனவே  அவிட்ட நட்சத்திரக்காரர்கள் நேரம் கிடைக்கும் போது  இத்தல இறைவனை வணங்கி வாருங்கள்...!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close