மனிதனை போல் இறைவனும் குணம் மாறுவாரா?

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 06:54 pm
will-god-become-like-a-human-being

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள். ஸ்ரீமந்நாராயணன் கூட நரசிம்ம அவதாரம் எடுக்கும்போது தன்  சத்வ குணம் மாறி ரஜோ குணத் தைக் கொண்டவராக மாறினார். இப்படி குணம் மாறும் இயல்பு கடவுளுக்கும் உண்டு போல என்பதை விளக்கும் கதை இது..

பஸ்மாசுரன் என்னும் அரசன் சிறந்த சிவபக்தனாக இருந்தான்.  பக்தன் மனம்  உருகி தன்னை வலிக்க வைக்கும் போது இறைவனும் மனம் உருகி  வரம் அளிப் பது இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் வரம் வாங்கிய சிவனின் தலையி லேயே கைவைத்தான் பஸ்மாசுரன்.. பஸ்மாசுரனுக்கு அதிவிபரீத ஆசை தோன் றியது. உலகத்திலிருப்பவர்களுக்கு தானே கடவுளாக வேண்டும் என்னும் ஆசை உண்டானது. அதனால் பல்லாயிரக்கணக்கான வருடங்கள்  கடுமையாக தவம் புரிந்தான்.

பஸ்மாசுரன் என்னும் அசுரனது தவத்தை மெச்சிய சிவப்பெருமான் நேரில் தோன் றினார். ”உன் பக்தியை மெச்சினேன் பஸ்மாசுரா.. உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார்... ”இறைவா  மரணமே இல்லாத வாழ்க்கையை எனக்கு அளிக்க வேண்டும்” என்றான்.. இப்படியொரு வரத்தை யாருக்கும் யாரும் வழங்கமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் சிவபெருமான். நம்மை பார்த்து அனைவரும்  அச்சப்பட்டாலே போதும் என்று நினைத்த பஸ்மாசுரன்..   ”நான் யாரை கோபமாக நினைத்தாலும் அவர்கள் மடிய வேண்டும்” என்ற வரத்தைக் கேட்டான்.. இதையும்  தரமுடியாது என்று மறுத்த சிவப்பெருமான். ”இறுதியாக உனக்கு வாய்ப்ப ளிக்கிறேன்” என்று கூறினார். ”இறைவா நான் யார் மீது தலை வைக்கிறேனோ அவர்கள்  இறக்க வேண்டும்” என்றான். ”அப்படியே  ஆகட்டும்” என்றார் சிவப் பெருமான்.. மகிழ்ச்சியடைந்த பஸ்மாசுரன் தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்  பிடுங்குவது போல... ”உங்கள் தலைமீது கைவைத்து வரத்தை உறுதி செய்து கொள்கிறேன்”  என்று  சர்வேஸ்வரன் அருகில் வந்தான். 

தன்னை யாராலும் அழிக்க முடியாது  என்பதை சிவப்பெருமானே அத்தருணத் தில் மறந்துவிட்டா போன்று பஸ்மாசுரன்  நெருங்கிவந்ததும் அச்சத்தில் ஓடினார்.... பூலோகம், மேலோகம் சுற்றி இறுதியாக வைகுண்டத்துக்குள் கால் பதித்தார். ஸ்ரீமந் நாராயணன்...  மோகினி அவதாரம் எடுத்து பஸ்மாசுரன்  அரு கில் நடனமாடினான். பார்வை மாறியது.. மோகினியின் அழகில் கவரப்பட்ட பஸ்மாசுரன் அவளுடன் இணைந்து  நடனமாடினான். ஆட்டம் விறுவிறுப்பாக போனது.. நடன வேகத்திலும் மோகினி மயக்கத்திலும் வேகமாக ஆடிய அசுரன்  நடனத்தில் மோகினியைப் பின்பற்ற.. மோகினி ஒய்யாரமாக தலைமேல் கைவைத்து சுற்றி சுற்றி ஆடினாள்.. மயக்கத்தில் பஸ்மாசுரனும்  தலையில் கைவைக்க அந்த இடத்திலேயெ இறந்தான். 

சிவன் அச்சத்தில் ஓடியதாக கதையில் சொல்லப்பட்டாலும் அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரனுக்கு தெரியாதா? பஸ்மாசுரனின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close