பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்...

  தனலக்ஷ்மி   | Last Modified : 10 Apr, 2019 08:58 pm
puratati-nakshtras-which-temple-to-go

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் தங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்திலுள்ள திருவானேஷ்வர் கோயில்..

பஞ்ச பாண்டவர்களில் இளையவனான சஹாதேவன் சாஸ்திரக்கலையையும் கணிதத்தையும் துல்லியமாக கணிக்கும் திறமை படைத்தவன். அறிவுக் கூர்மையில் சிறந்து விளங்கும் சஹாதேவனைப் பார்த்து ஸ்ரீகிருஷ்ணரே ஆச்சரியம் அடைந்த தருணங்களும் உண்டு. எதிரிகளிடமும் பொய்மை காட்டாமல் நேர்மையாக சாஸ்திரம் கணித்து சொல்லும் சஹாதேவன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி என்பதாலும் சாஸ்திரங்கள் கற்க விரும்புவர்கள் இத்தல இறைவனை வேண்டி பலன் பெறுவதாலும் திருவானேஷ்வர் தலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்கு உரிய தலமாயிற்று...
 

இத்தல இறைவன் கால பைரவரின் மூலமாக 7 கிழமைகளையும் படைத்தார். அவைகளை ஏழு யானைகள் மீது ஏற்றி  காலச் சக்கரத்தை உருவாக்கிய தலம் இது. இது நடந்ததும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று என்பதாலும் இத்தலம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரியதாயிற்று...
 

மிகவும் பிரதானக் கோயிலான இது கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. 67 மாடக்கோவில்களில் இத்தலம் முதன்மையானது. காஞ்சிப் பெரியவர் இத்தலத் தில் ஒரு வாரம் தங்கியிருந்து இறைவனுக்கு பூஜை செய்து தியானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இறைவன் திருவானேஷ்வர். கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களின் தலைவன் இந்திரனும், ஐராவத யானையும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதிகம். இறைவி காமாட்சி அம்மன். தெற்கு திசையில் நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். புடைப்பு சிற்பமாக வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் அமைந்திருக்கிறார்கள். வள்ளி தெய்வானையுடன் முருகரும், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, நவக்கிரகம், நந்தி சன்னிதிகள் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றன.

ஜாதகத்தில் இரண்டாமிடம் சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் புதனுக்கும் உரியது. சந்திரன் மதியையும், புதன் அறிவையும் ஆள்பவர். பக்தர்கள் பூரட்டாதி நட்சத்திரத்தன்று வறுமையில் வாடும் ஏழை எளியோருக்கு ஏழு வகையான  நிறங்களில் ஆடைகளை தானம் அளித்தால் சிறந்த புத்திக்கூர்மை பெறுவதோடு ஏழு ஜென்ம பாவங்களும் தீரும் என்பது ஐதிகம். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது நேரம் கிடைக்கும் போது திருவானேஷ்வரரைத் தேடி சென்று தரிசியுங்கள். முற்பிறவி பாவங்களும் நீங்கி சுகமாக வாழ்வீர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close