உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செல்லவேண்டிய தலம்....

  தனலக்ஷ்மி   | Last Modified : 11 Apr, 2019 03:31 pm
uththirattaadi-nakshtras-which-temple-to-go

துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்குதான் இறைவன் இருக்கிறான் என்று சொல்லும் பக்தர்கள் தங்கள் நட்சத்திரங்களுக்கேற்ற தலத்தை வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆன்மிக பெரியவர்கள் கூறுகிறார்கள். 

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள தாங்கள் பிறந்த ஜென்மநட்சத்திரத்தன்று அல்லது நேரம் கிடைக்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் சகஸ்ரலட்சுமீஸ்வரரை வணங்கி  வளம் பெறலாம். இத்தலம் அமைந்திருக்கும் ஊர் தீ அயனூர் என்னும் புராணபெயரில் அழைக்கப்படுகிறது. தீயாகிய அக்னி பகவானும், அயனாகிய சூர்ய பகவானும் இத்தலத்தில் ஹோமம் செய்து சிவனை வழிபட்டதால் இந்த ஊர் தீ அயனூர் ஆகி தீயத்தூராக மருவிவிட்டது.

தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தைப் பிறந்தநாளாக கொண்டவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த இத்தல இறைவனான சகஸ்ரலட்சுமீஸ்வரரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அரூபமாக வந்து வழிபடுவதாக ஐதிகம்.

திருமால் தினமும் சிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை பூஜை செய்யும் போது ஆயிரம் தாமரையில் ஒரு பூ குறையவே தனது கண்ணை பிடிங்கி பூஜை செய்யலாம் என்று  முயன்றார்.  அப்போது சிவபெருமான் தோன்றி திருமாலை தடுத்தார். திருமாலின் பக்தியைக் கண்டதும் மகாலட்சுமிக்கும் சிவனை வழிபடும் ஆசை வந்துவிட்டது.

சிவனை நேரில் காணும் பொருட்டு அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி பூலோகத்துக்கு வந்து ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தாள். சிவனும் மகாலட்சுமியின் கோரிக்கையை ஏற்று... நேரில் தரிசனம் தந்தார். சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள்படும். ஆயிரம் மலர்களால் தரிசித்ததாலும் மகாலட்சுமி விரும்பி  பூஜித்ததாலும் இத்தல இறைவன் சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார்.

இத்தல மூலவர் சகஸ்ரலட்சுமீஸ்வரர். சுயம்பு மூர்த்தியான இவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தாயார் பிரஹன் நாயகி அல்லது பெரிய நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கிருக்கும் கணபதி வாஞ்சா கணபதி என்னும் பெயரில் தனிசன்னிதியில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பிரகாரத்தில் நந்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், பிரம்மா, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் அமைந்திருக்கின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இத்தலத்துக்கு வந்து ஹோமம் செய்து நெய், முழுமுந்திரி,  திராட்சை, தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலை  நைவேத்தியமாக படைத்து பிரசாதமாக ஏழை மக்களுக்கு கொடுக்கலாம். மகாலட்சுமியே வழிப்பட்ட தலம் என்பதால் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் செல்வம் தங்கும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close