பெயர்கள் வேறு… பிரார்த்தனைகள் ஒன்றுதான்...!

  தனலக்ஷ்மி   | Last Modified : 13 Apr, 2019 01:27 pm
names-are-different-worships-are-same

பாரம்பரியமிக்க  பண்பாடு பொருந்திய நம் பாரத நாட்டுக்கு  புத்தாண்டு என்பது  ஆங்கில மாத துவக்கமான ஜனவரி அல்ல... சித்திரைத் திங்கள் முதல் நாளைத்தான் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகிறோம்.

உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழர்கள்  எல்லோரும் தாங்கள் இருக் கும் இடத்திலேயே சித்திரைத் திங்களை வரவேற்று மகிழ்கிறார்கள்.  தமிழ்  புத் தாண்டு சித்திரை மாதம் தான் என்பதை பண்டைய இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சங்கக் காலத்தில் சித்திரை மாதம் தொடங்கும் போது தான் சூரியனின் கிரணங்கள் புவியின் நடுகோட்டிற்கு நேராக வந்து நிற்கிறது என்பதை அறிந்த முன்னோர்கள் அதையே  ஆண்டு தொடக்கமாக கொண்டாடினார்கள்.
 
நக்கீரரின் ’திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாகவிண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து’ என்று தொடங்கும் நெடுநல்வாடையில்  ஆடு என்பது மேஷராசியைக் குறிக்கிறது. மேஷ ராசியின் தொடக்கம் சித்திரை என்பதை இதிலி ருந்து அறிந்துகொள்ளலாம்.  தொல்காப்பியத்தில் 12 மாதங்களை 6 பருவங் களாகப் பிரித்து அவற்றின் முதல்மாதமாக சித்திரையைக் குறிப்பிட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 வீடுகளில் முதல் வீடாக சித்திரையைக் குறிப்பிட்டு சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தெலுங்கு மற்றும் கன்னட மொழிக்காரர்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டைக் கணக்கிட்டு கொண்டாடுகிறார்கள். தமிழர்களும் மலை யாளர்களும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டை கொண்டாடு கிறார்கள். இலங்கையிலும் சிங்கள மக்கள்  தமிழ் சிங்கள புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளைத்தான் கொண்டாடுகிறார்கள்.இந்தியாவில் வடநாட்டினர் வட மாநிலத்தவர் இம்மாதத்தை சைத்ர என்றும், தெலுங்கில் சைத்ரமு என்றும் வங்காளியில் சொய்த்ரோ என்றும்  சித்திரை மாதம் அழைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் சித்திரையை வரவேற்பதற்கு  9 நாட்களுக்கு முன்னதாகவே சைத்ர நவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். 

நவராத்திரி வழிபாட்டிற்கு உகந்த துர்க்கையை வணங்கி விளைச்சல் அமோகமாய் இருக்கவும். வரும் ஆண்டு விவசாயம் செழிக்கவும் பிரார்த்திக் கிறார்கள். இந்த நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸப்த ரிஷிகளையும் வழிபடுகிறார்கள். ஸப்த ரிஷி விரதங்களைக் கடைப்பிடித்து இறுதி நாளான ஸ்ரீ இராம நவமியில் விரதத்தை முடிக்கிறார்கள்.

சித்திரை மாதத் தொடக்கத்தை தமிழர்கள் தமிழ்புத்தாண்டு என்றும், தமிழ் சிங்களப் புத்தாண்டு என்றும், சைத்ர என்றும், சைத்ரமு என்றும், சொய்த்ரோ என்றும், ஓரியர்கள் இந்நாளை பணா சங்ராந்தி என்றும், வடகிழக்கில் இருப்பவர்கள் மகாவிஷுவ சங்ராந்தி என்றும்,  பஞ்சாபியர்கள் பைசாகி என்றும்,  அஸ்ஸாமியர்கள் பிஹூ என்றும், துளுவர்கள் பிஷூ பர்பா என் றும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.  

வெவ்வேறு பெயர்களில் கொண்டாடினாலும் எல்லோரது பிரார்த்தனையும் வருடம் முழுக்க  வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்பது தான்.. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close