அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவார்களா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 14 Apr, 2019 12:40 am
aswini-start-people-is-getting-emotional

27 நட்சத்திரங்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அல்லது பிறந்த ஜென்மநட்சத்திரத்தன்று அவர்களுக்குரிய திருத்தலங்களுக்கு சென்று வணங்க வேண்டும் என்பதை இதுவரை தொடர்ந்து பார்த்தோம். தினம் ஒரு நட்சத்திரம் வாயிலாக  தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலங்க ளைப் படித்து வந்த உங்களுக்கு, நட்சத்திர ரீதியாக பொதுவான குண நலன் களையும் அளிக்கவிருக்கிறோம்.. 

நட்சத்திரத்தில் முதன்மையாக கொண்டிருக்கும் அஸ்வினி நட்சத்திரத் தைக் கொண்டவர்களின் பொதுவான குண நலன்களை பார்க்கலாம்.. இந்த நட்சத்திரக்காரர்கள்  மேஷ ராசியைக் கொண்டிருப்பார்கள். அஸ்வினி நட்சத்தி ரத்தை ஆளும் கிரகம் கேது....  ராசிக்குரிய கிரகம் செவ்வாய்...

அஸ்வினி நட்சத்திரக் கூட்டம் குதிரை முக வடிவமைப்பைக் கொண்டது.. அஸ்வினி முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் ஒவ்வொரு கிரகத்தின் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.. 

முதல்பாதத்தைக் கொண்ட நீங்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சத்தைக் கொண்டவர்கள். இயல்பிலேயே வீரம், குடும்பத்தில் பற்று, எல்லாவற்றிலும் ஆசை, சிறிது முரட்டுக்குணமும் கொண்டிருப்பீர்கள்.. 

இரண்டாம் பாதத்தைக் கொண்ட நீங்கள்  சுக்ரனின் அம்சத்தைப் பெற்றவர் கள். இவர்களுக்கு இயல்பிலேயே கலைத்துறையில் நாட்டம் இருக்கும். செல்வம், இன்பம், புகழ் மீது ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.

மூன்றாவது பாதத்தைக் கொண்டிருப்பவரா... நீங்கள் புதனை  அதிபதியாக கொண்டவர்கள்.. இயல்பிலேயே நற்குணங்கள் நிறைந்து கல்வி, கேள்வி, ஆன் மிகம், திறமை, எல்லா இடங்களிலும் முதன்மை என சிறப்பான குணங்களை கொண்டிருப்பீர்கள்.

நான்காவது பாதத்தைக் கொண்டிருப்பவர்கள்  சந்திரனை அம்சமாக கொண் டவர்கள்..  நீதியும் நேர்மையும்  பற்றிக்கொண்டிருந்தாலும் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.

பொதுவான குணநலன்கள்:

எந்த செயலில் இறங்கினாலும் அதில் வெற்றி பெறவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பீர்கள். செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் சிறந்த இலட்சியவாதியாக திகழ்வீர்கள்.. ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயல் வேகம் மிகுந்த அவருடைய ஆற்றல் உங்கள் செயல்களில் பிரகாசிக்கும். காலம் கனிய காத்திராமல் உடனடியாக செயல்பட தொடங்கு வீர்கள். முன் கோபம் அதிகம் என்பதால் நட்பும் சுற்றமும் குறுகிய எல்லைக் கோட்டிலேயே நிற்பார்கள். உடல் உஷ்ணம் வாய்ந்ததாக இருக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுதலும் அதிகமான எதிர்பார்ப்பும் இயல்பாக கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் அதிக தன்னம்பிக்கை, வேகமான முடிவுகள்,  பிடிவாதம், வறுபுறுத்தி சாதிக்கும் தன்மை இயல்பான குணங்களோடு பொருந்தி இருப்ப தையும் காணலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close