இறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி !

  தனலக்ஷ்மி   | Last Modified : 14 Apr, 2019 10:53 pm
small-help-and-big-help-by-god

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின்  மாணப் பெரிது 

என்றார் திருவள்ளுவர். 

பத்து ரூபாய் தர்மம்  செய் வதை  விட 100 ரூபாய் தர்மம் செய்தவர்கள் தான் மிகப்பெரிய  உதவி செய்தவர்கள் என்று அர்த்தம் இல்லை.  சிறு உதவியாக இருந்தாலும் தக்க நேரத் தில் செய்தால் அதற்கு இணை எதுவுமே கிடையாது. இறைவனது கணக்கிலும்   இது சிறிய உதவி என்றும்.. இது  பெரிய உதவி என்றும் பாகுபாடு காட்டாமல்   உதவியவர்கள் உதவியவர்களின் சூழ்நிலையை பொறுத்தே கணிக்கப்படும்.   

ராஜபுரம் என்னும் ஊரில் தருமநாதன் ஒருவன் இருந்தான்.. பிறருக்கு செய்யும் உதவிகளை நாலுபேரிடம் சொல்லி காட்டவே  செய்து வருவான்.. யாராவது பிட்சை கேட்டால் ஒரு நிமிடம் இருங்கள் என்று சுற்றும் முற்றும் பார்ப்பான். யாராவது அவனுக்குத் தெரிந்தவர்கள் அந்த வழியாக வரும் வரை உதவி கேட்பவர்களை நிறுத்தி வைப்பான். அறிமுகமானவர்கள் வந்ததும் அவர்களுக்கு கேட்கும் வண்ணம் உரக்க  ”உதவி செய்வது  ஒன்றும் பெரிய விஷயமில்லை எனக்கு எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க விருப்பம்தான்” என்று  கூறியபடி பணமோ பொருளோ கொடுப்பான். 

வீட்டு படியேறி பசி என்று வருபவர்கள் கூட இப்படித்தான்.. அவன் வீட்டைத் தாண்டி  தெரிந்தவர்கள் போகும் வரை  பசியால் வாடியவரை உட்கார வைத்தி ருப்பான்..  பசி மயக்கத்தில் சாயந்தாலும் சரி   கண்டுகொள்ள மாட்டான். அறிந்த வர்கள் வரும்போது ”உங்களுக்கு பசியாற வேண்டுமென்றால் எங்கும் செல்ல வேண்டியதில்லை.. என்னிடம் வாருங்கள்” என்று  பெருமையாக கூறுவான்.. 

தருமநாதனின் தந்திரத்தை அப்பாவி ஊர்மக்கள்  அவன் உதவி செய்வதைக் கண்டு தலைமேல் கொண்டாடினார்கள். ”அட என்ன செய்துவிட்டேன் நான்..”. என்று மனதிற்குள் மகிழ்ந்து வெளியே தன்னடக்கத்தோடு இருப்பான்.   ஒரு நாள் வழக்கம் போல் வழிப்போக்கன் ஒருவன் பசியெடுக்கவே  தருமநாதனின் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். அவன் வந்த நேரம் அறிந்தவர்கள் அவர்கள் வீட்டை தேடிவர.. ”இருங்கள் பசி என்றவருக்கு உணவு கொடுத்துவிட்டு வரு கிறேன்” என்று பெருமையாக சொல்லியபடி உணவு இட்டான்..  இப்படியே தன் வாழ்க்கையைக் கழித்து மேலோகம் சென்றான்.

நாம் தான் உதவி செய்வதில் மன்னனாக இருந்தோமே நமக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று போனான். அங்கு இவனுக்கு முன் இவனிடம்  உணவு வாங்கிசென்ற வழிப்போக்கன் தங்கத்தட்டில் பசியாறிக்கொண்டிருந்தான். அடடா பிச்சை எடுத்த இவனுக்கே தங்கதட்டு என்றால் நமக்கு என்று காத்திருந்தான்.

எமதர்மன் வந்ததும்.. ”இவனை அழைத்து செல்லுங்கள்..  பசி என்று கேட்டால்  உடனே உணவு தராமல்  வாழ்க கோஷத்தை ஆயிரம் முறை சொல்லி.. பசி மயக் கம் வரும்போது கொடுங்கள்” என்றான். ”என்ன அநியாயம்?” என்றான் தரும நாதன்.. ”எது அநியாயம் செய்யும் உதவி குறித்த நேரத்தில் கோருபவருக்கு போக வேண்டும். நீ  உனக்கு பேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக  காத்திருக்க வைத் தாயல்லவா அதனால் தான் இந்த தண்டனை உன்னிடம் உணவு வாங்கிய வழி போக்கன் தன்னை விட பசியில் துடித்த முதியவருக்கு கேட்காமலேயே தனது உணவை தானம் அளித்ததால் அவனுக்கு தங்கத்  தட்டில் சாப்பாடு”  என்றார். 

இப்போது புரிகிறதா வள்ளுவரின் வாக்கில் துல்லியமான உண்மை பொதிந்திருப்பதை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close