கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 15 Apr, 2019 02:54 pm
krithikai-stars-will-progress-gradually

கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுடைய நட்சத்திரம். நான்கு பாதங்கள் கொண்ட கிருத்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் மேஷ ராசியிலும் எஞ்சிய மூன்று பாதங்கள் ரிஷப ராசியையும் கொண்டிருக்கிறது. ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட இது அக்னி சம்பந்தமான நட்சத்திரம் என்று கூறுவார்கள். இந்நட்சத்திரத்திற்குரிய ராசிநாதன் செவ்வாய் அல்லது சுக்கிரன். நட்சத்திர அதிபதி சூரியன்.

கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்ட நீங்கள் குருபகவானை அம்சமாக கொண்டிருப்பீர்கள். ஞானத்தை பெற்றிருக்கும் நீங்கள் அதிக செல்வத்தையும் விரும்புவீர்கள். செல்லும் இடமெல்லாம் புகழும் கெளரவமும் விரும்புவீர்கள்.
 

கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்ட நீங்கள் சனி பகவானின் அம்சத்தைக் கொண்டவர்கள். குடும்பத்தினரிடமும், பழகிய அனைவரிடமும் பாசம் காட்டுவீர்கள். நோக்கங்கள் உயரியதாக இருப்பது போலவே தற்பெருமை கொள்வதையும் விரும்புவீர்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்ட நீங்கள் சனிபகவானின் அம்சத்தைக் கொண்டவர்களே. ஆசைகளை அடக்காமல் பேராசை கொள்ளும் இயல்பை பொதுவாக பெற்றிருப்பீர்கள். ஆசை கட்டுக் கடங்காமல் போனால் பொறாமை, கோபம், வன்மம் போன்ற குணங்கள் இயல்பாகவே உங்களை வந்தடையும்.

கிருத்திகை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்ட நீங்கள் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள்... இயல்பாகவே ஆன்மிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். ஒழுக்கத்தைப் பெரியதாக எண்ணி வாழ்வீர்கள். இரக்க குணம் கொண்டிருப்பதால் தானம் செய்து மகிழ்வீர்கள்.

நான்கு பாதத்தைக் கொண்டவர்களுக்குரிய பொதுவான குணநலன்கள்:

மன ஆற்றலையும், மன உறுதியையும் கொண்டிப்பீர்கள். வாழ்க்கையில் உண்டா கும் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கை இயல்பாகவே பெற்றிருப்பீர்கள். வறுமை என்னும் நிலை தொடராமல் செல்வத்தோடு இருப்பீர்கள். எப்போதும் வேலையிலேயே மூழ்கி இருப்பதால் மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.. அழகு, ஆடம்பரம் மீது ஆசையிருந்தாலும் படிப்படியான முன்னேற்றம் கொண்டிருப்பீர்கள்... 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close