நாட்டையே ஆளலாம் பரணி  நட்சத்திரக்காரர்கள்...சிந்தித்து செயல்பட்டால்..!

  தனலக்ஷ்மி   | Last Modified : 16 Apr, 2019 11:49 am
bharani-star-people-can-rule-the-country

பரணி தரணி ஆளும்.  அப்படிப் பார்த்தால் பரணி நட்சத்திரத்தில்  பிறந்த எல்லோரும் தரணி ஆள வேண்டுமே...  இந்தப் பழமொழிக்கு அர்த்தம் உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுக போக வாழ்க்கை வாழக் கூடிய வர்கள் இவர்கள் என்பதுதான்..

உங்கள்  ராசிநாதன் செவ்வாய். நட்சத்திர அதிபதி சுக்கிரன்... பரணி நட்சத் திரத்தில் முதல் பாதம் கொண்டவர்கள்  சூரியனின் அம்சத்தைக் கொண்டவர் கள்... நல்ல பேச்சுதிறமையைக் கொண்டிருப்பீர்கள். எதையும் கூர்ந்து நோக்கி உங்களுக்கு சாதகமாக அமைத்துக்கொள்ளும் புத்திக்கூர்மையைப் பெற்றிருப் பீர்கள். ஆனால் கோபமும், பொறுமையின்மையும் உங்கள் முன்னேற்றத்தைத் தள்ளி வைக்கும்.

பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் கொண்டவர்கள் புதனின் அம்சத்தைக் கொண்டவர்கள்... குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பீர்கள். ஆடை, அணிகலன், விலையுயர்ந்த பொருள் என்று  வாங்கி மகிழ்ந்தாலும் திருப்தி இல்லாத மனநிலையில் இருப்பீர்கள்.

பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் கொண்டவர்கள்.. சுக்கிரனை அம்சமாக கொண்டவர்கள்.  நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.. நினைவாற்றலையும்  வெற்றியையும் எப்போதும் உங்கள் வசம் வைத்திருப்பீர்கள். தன்னம்பிக்கையைக் கொண்டிருக்கும் நீங்கள் எளிதில் யாரையும் நம்பமாட்டீர்கள்.

பரணி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் கொண்டவர்கள்... செவ்வாயின் அம்சத்தைக் கொண்டவர்கள்.. எங்கும் முதன்மையான இடத்தில் இருக்கவே விரும்புவீர்கள். ஆடம்பரமாக வாழவேண்டும் என்னும் ஆசையைக் கொண்டிருப் பதால் இயல்பிலேயே மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். 

பொதுவான குணநலன்கள்:

எப்போதும் ஆடம்பரமாக வாழவே விரும்புவீர்கள். அழகு, ஆபரண, விலை உயர்ந்த பொருள்களின் மீது பற்று வைத்திருப்பீர்கள். எளிதில் திருப்தி அடைய மாட்டீர்கள். எதிரிகளிடம் இரக்க குணத்தைக் காண்பிக்க மாட்டீர்கள். மேம்போக் காக எந்த விஷயத்திலும் ஈடுபடாமல்  வெற்றி பெறும் வரை ஓயமாட்டீர்கள்.  சட்டென்று உணர்ச்சிவசப்படும் குணத்தால்  எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்தி ருப்பீர்கள். சுயநலம் கொண்ட நீங்கள் பாசக்காரர்களாகவும் இருப்பீர்கள். கோபத் தைக் குறைத்து எந்த ஒரு செயலையும் யோசித்து முடிவு செய்தால் நிச்சயம்  வீட்டை அல்ல தரணியையே ஆளலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close