ஏவல், பில்லி, சூனியம் என்பது கட்டுக்கதையல்ல... உண்மை…

  தனலக்ஷ்மி   | Last Modified : 16 Apr, 2019 03:52 pm
evaluation-billy-black-magic-is-not-a-myth-true

நல்லவர்கள் வசிக்கும் இடங்களெல்லாம் வஞ்சகர்களும் நிறைந்திருக்கிறார்கள் என்பது இன்றைய கலியுகத்தில் மட்டுமல்ல அன்றைய புராண இதிகாச காலங்களிலேயே உண்டு.  பகல் -இரவு, நன்மை- தீமை, சூரியன்- சந்திரன் என்று எதிரெதிர் துருவங்கள் உண்டு என்பதைக் கண்கூடாக பார்க்கிறோம்... அதே போன்று இறைவன் என்பவன் நீக்கமற நிறைந்திருப்பதாலேயே அங்கு சாத்தான் வசிப்பதும் உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் இறை நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் சிலர்...

ஏவல், பில்லி, சூனியம் என்பது கட்டுக்கதையல்ல... கலியுகத்தில் இல்லாததும் அல்ல...பிடிக்காத ஒருவரது நிம்மதியைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டு... கெட்டதை உண்டாக்கும் மந்திரங்களை உச்சரித்து உருவேற்றி அதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்த இயலும். இந்த  வகையான மந்திரங்கள் அபிசார மந்திரங்கள்  என்று சொல்கின்றனர். இது குறித்து நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்திலலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
   

கெட்ட மந்திரங்களை ஏவும் இந்ந சூனியம் பற்றி நமது ஓலைச்சுவடிகளிலும் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய கெடுதல் தரும் ஏவலை கண்டறிவதிலும், அதை விரட்டியடிப்பதிலும் கேரள  மாந்திரீகர்கள் திறமைமிக்கவர்கள்.

மந்திரங்களில் நல்ல மந்திரங்கள், கெட்ட மந்திரங்கள் உண்டா என்று கேட்கலாம்.  நேர்மறை எண்ணங்களும், எதிர்மறை எண்ணங்களுமே நம்முடைய வாழ்க்கையின் நல்லது, கெட்டதுகளைத் தீர்மானிக்கிறது என்பதற்கேற்பவே மந்திரங்களும் ஒலி எதிர்வை கொண்டவையே.. 

தீய மந்திரங்களை தீவிரமாக ஒருவர் மீதோ அல்லது அவரை நினைத்தோ உச்சரித்து தீய அதிர்வலைகளை அவர் மீது படும்படி செய்யும்போது அவரது தெளிந்த மனத்தை துல்லியமாக குழப்பி செயல்படுத்துதலில் ஒருவித  சோர்வையும், மந்தத்தையும் உண்டாக்குவதோடு நிலையான மனத்தையும் மாற்றி வைத்துவிடும்.. இப்படி மந்திரங்களை ஏவி கெட்ட அதிர்வுகளை உண்டாக்கி கெடுதலான விஷயங்களை செய்ய தூண்டுவதையே ஏவல் என்று சொல்கிறரர்கள்.

சூனியம் என்பதும் இப்படித்தான். வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் வெறுமையாக இருப்பதுதான் சூனியமாக சொல்லப்படுகிறது. மனிதனின் மனத்தை ஒன்றுமில்லாமல் முடக்கி செயல்படவே முடியாமல் ஒரே இடத்தில் உட்கார வைப்பதுதான் சூனியம் வைத்தல் என்று பொருள்படுகிறது.

யார் மீது ஏவினாலும் இவையெல்லாம் பயன்தருமா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்.. இறை சிந்தனையில் மூழ்கியிருப்பவர்களிடமும், வாழ்வில் இன்பமும், துன்பமும் சகஜம் என்னும் நிலையில் மனதை பக்குவமாக வைக்கும் போதே ஒரு வித நேர்மையும், கம்பீரமும் வந்து விடுபவர்களிடமும் இவை எளிதில் நெருங்காது.. ஆனால் அச்சம் கொண்ட மனதோடு வளைய வருவதும்.. மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் வலுக்கும் நேரங்களிலும் ஏவிவிடப்படும் போது மகான்களாக இருந்தாலும் பாதிப்பு அடைகிறார்கள் என்பதே உண்மை.

பில்லி, ஏவல்,சூனியம் செய்தால் செய்தவர்களை மட்டும் பாதிக்காது.. தீய மந்திரங்களால் அவர்கள்  துன்பத்தை அடைந்தாலும் இறைவனது சக்தியால் மீண்டுவிடுவார்கள்.. ஆனால் ஏவியவர்கள் எப்படி மீள முடியும்.. தீய சக்திகளின் பலன்களை அவர்களும் அனுபவிப்பார்கள். அதிலும் சற்று ஆழமாக.. 

எப்போதும் மனத்தை இறைவன் பால் செலுத்துங்கள். நேர்மறை எண்ணங்களோடு கம்பீரமாக வளைய வாருங்கள். இறைவனதி திருநாமம் மனதிற்குள் உச்சரித்து கொண்டே இருங்கள்.. பிறகு ஏவல் அல்ல.. ஏவியது குட்டிச்சாத்தானாக இருந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close