எப்போதும் செல்வாக்கோடு இருக்க விரும்பும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள்

  தனலக்ஷ்மி   | Last Modified : 16 Apr, 2019 04:01 pm
rohini-starrels-who-always-want-to-be-influential

ரோகிணி நட்சத்திரம் தேர் வடிவில் அமைந்த  ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் நட்சத்திரம் இது. ரோகிணி நட்சத்திரத்தின் ராசிநாதன் சுக்ரன். இதன் அதிபதி சந்திரன்.. இந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் ரிஷப ராசியை உடையவர்கள்.

ரோகிணி நட்சத்திரத்தை முதல் பாதமாக கொண்டவர்களுக்கு அதிபதி செவ்வாய். செய்யும் அனைத்து செயல்களிலும் ஈடுபாடு இருந்தாலும் மன உறுதியை வர வழைத்துக்கொள்ள வேண்டும். பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பீர்கள். வெற்றிக் கனியை பறிக்க முடியவில்லையென்றால் தோல்வியில் துவண்டு விடுவதற்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களுக்கு அதிபதி சுக்ரன். வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக கழிக்கவே விரும்புவீர்கள். பொதுநல ஈடுபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். விரும்பியதை அடைய முயற்சி செய்து வெற்றிபெறுவீர்கள். எல்லாமே வெற்றியில் முடியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு குணம் இயல்பிலேயே அமையும்.

ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தைக் கொண்டவர்கள் புதனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். இயல்பிலேயே புத்திக் கூர்மை பெற்றிருப்பதால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள். ஆன்மிகம், எழுத்து, இலக்கியம், கலைகளில் விருப்பமுடயவர்களாக இருப்பீர்கள்.        

ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்கள் சந்திரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். மனத்தில் நினைப்பதை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பாசம் காட்டுவதில் முன்னோடியாக இருக்கும் நீங்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.. பொறுமையாக  இருந்து சாதிப்பீர்கள்.

ரோகிணி நட்சத்திரக்கைக் கொண்ட நீங்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து தன்னிச்சையாக முடிவு செய்வீர்கள். தலைமை தாங்கும் பண்பை பெற்று கம்பீரமான தோற்றத்தோடு இருப்பீர்கள். பாசமும், நேசமும் கொண்ட உங்களுக்கு  ஊர் சுற்றுவதில் பெரும் ஆசை இருக்கும். எப்போதும் செல்வாக்கோடும், பிறரை கவரும் வகையிலும்  உங்களது செயல்பாடுகள் இருக்கும். எழுத்து, கலை, இலக்கியத்தில் ஈடுபாடும் திறமையும் பெற்று இருப்பீர்கள். பொது வாழ்க்கையில் விருப்பமுற்று காணப்படுவீர்கள்... 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close