சுயநலமும் பொதுநலமும் கலந்த குணமே திருவாதிரை நட்சத்திரம்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 17 Apr, 2019 08:54 pm
selfishness-and-welfare-are-the-thiruvadirai-star

திருவாதிரை நட்சத்திம்.. நடராஜபெருமான் அவதரித்த நட்சத்திரம் இது. சிவாலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மார்கழிமாத ஆருத்ரா தரிசனம்  நடைபெறுவது திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான்.. 
 

திருவாதிரை நட்சத்திரத்தை முதல் பாதமாக கொண்டவர்கள் குருபகவானை அதிபதியாக கொண்டிர்ப்பீர்கள். குருவை அம்சமாக கொண்டிருப்பதால் கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவீர்கள்.. பொதுநலனில் விருப்பமுள்ளவர்களாக திகழ்வீர்கள். எல்லாவற்றுக்கும் கோபம் என்பது உங்களோடு ஒட்டி பிறந்திருக்கும்..
   

திருவாதிரை நட்சத்திரத்தை இரண்டாம் பாதமாக கொண்டவர்களான நீங்கள் சனிபகவானை அம்சமாக கொண்டிருப்பீர்கள்.. எல்லோருமே உங்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தை விடாபிடியாக கொண்டிருப்பீர்கள். பொதுநலன் கருதாத சுயநலமிக்க  எண்ணமே உங்களை வழிநடத்தும். உங்களை சுற்றி இருப்பவர்களின் அன்பான வழிகாட்டுதலில் மட்டுமே நீங்கள் சிறந்து விளங்க முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தை மூன்றாம் பாதமாக கொண்டவர்கள் சிவ பகவானை அம்சமாக கொண்டிருப்பீர்கள் என்பதால் இவர்களும் சுயநலத்தோடு மூர்க்கத்தனத்தையும்  இயல்பாகவே கொண்டிருப்பீர்கள். உங்களை புகழ்வதையே விரும்புவீர்கள் என்பதால் தான தர்மத்தையும் செய்வீர்கள். அவசரத்தில் முடிவெடுக்கும் குணம் உங்களுக்குண்டு என்பதால் வெற்றியை விட தோல்வியை அதிகம் சந்திப்பீர்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தை நான்காம் பாதமாக கொண்டவர்களான நீங்கள் குருபகவானை அம்சமாக கொண்டிருப்பீர்கள்.. வாழ்வை முழுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். பொதுவாழ்வில் நாட்டம் கொண்டிருப்பதோடு சேவை மனப்பான்மையையும் கொண்டவர்கள் நீங்கள்...

திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவாகவே கோபத்தை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவசரத்தில் முடிவெடுத்து பிறகு சிந்திப்பார்கள். புகழின் மீது பற்றுகொண்டவர்கள்.. தங்களது தோற்றத்தில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்...  சுயநலமும் பொதுநலமும் கலந்த குணங்களைப்  பெற்றிருப்பார்கள்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close