சனியின் நேரடி பார்வை பெறுவது சுபமா? அசுபமா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 21 Apr, 2019 02:48 pm
is-it-right-to-get-a-direct-view-of-saturn-acupama

தெய்வ சக்தியைப் பெறுவதற்கு ஆலயங்களில் தெய்வம் நேருக்கு நேராக அமைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் சனியின் பார்வை மட்டும் நேருக்கு நேர் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். காரணம் சனியின் பார்வை பொதுவாகவே அசுபத்தையே உண்டாக்கும் என்பது ஐதிகம். அதனால்தான் கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் சனியின் பார்வை நம் மீது விழாது...

தீங்கு செய்யும் நவக்கிரகங்களையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் இராவணன். எந்தளவுக்கு அடிமையாக வைத்திருந்தான் என்றால்... தனது சிம்மாசனத்துக்கு கீழே படிக்கட்டுகளாக மாற்றி படுக்க வைத்திருந்தான்...


ஒவ்வொரு முறை அரியாசனத்தில் ஏறி அமரும் போதும் நவக்கிரகங்களின் மார்பின் மீது ஏறி நின்று மிதித்தப்படி செல்வான். அவன் சிம்மாசனத்தில் ஏறும்போது ஒவ்வொரு நவக்கிரகமும் ஒவ்வொரு படிக்கட்டுகளில் வரிசையாக படுத்து கொள்வார்கள். நவக்கிரகங்களில் சனி பகவான் மட்டும் முதுகு காண்பித்து படுத்திருப்பார். எல்லாப்பேறும் கிடைத்து இராவணன் மகிழ்ச்சியாக இருக்கலாமா.. வந்தார் கலகமுனி… 

“என்ன இராவணா எல்லோரும் உன் கீழ்படிந்து நடக்கிறார்களா?” என்று கேட்டார்… ”அதில் என்ன சந்தேகம் நாரதரே…” என்று கேட்டான் மமதையுடன் இராவணன்… அதை அடக்கத்தானே வந்திருக்கிறேன் என்று நினைத்த  நாரதர்…”ஆனால் நவக்கிரகங்கள் எல்லாமே உங்களைக் கண்டு அச்சத்துடன் நடுங்கி நவக்கிரகங்கள் தங்கள் மார்பைக் காட்ட ஆனால் சனிபகவான் மட்டும் முதுகு காட்டி படுத்திருக்கிறாரே” என்றார் நாரதர்…

உடனே இராவணன் கோவத்தோடு சனிபகவானிடம் சென்று ”உன் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி என்னை அவமதிக்கிறாயா?” என்று கேட்டான்… ”இல்லை என் பார்வை உங்களுக்கு நன்மையைத் தராது என்பதால்தான் நான் உங்களுக்கு முதுகுப்பகுதியைக் காட்டுகிறேன்” என்றார் சனிபகவான். ஆனாலும் விடாமல் வற்புறுத்தியதால் சனிபகவான் மறுநாள் திரும்பி படுத்தார்.

இராவணன் ஒவ்வொருவர் மீதும் ஏறிவந்தார். சனிபகவானின் முறை வந்ததும் சனியின் நேர்பார்வை இராவணன் மீது பட்டது. அப்போது தொடங்கியது தான் இராவணனுக்கு ஏழரைச் சனி… அழிவுக்காலம் தொடங்கிய இராவணனை நினைத்து மகிழ்ந்த நாரதர் வந்த வேலை முடிந்த திருப்தியில் திரும்பினார்….  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close