கோத்திரம் அறிந்து தான் பெண் எடுக்க வேண்டுமா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 23 Apr, 2019 04:12 pm
do-you-want-to-take-the-girl-to-know-the-character

கோத்திரம் என்றால் இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். குறிப்பிட்ட வம்சத்துக்கு மூலவேராக இருந்து துணைபுரியும் அந்த வம்சத்தை உருவாக்கியவரின் பெயரையே கோத்திரத்தின் பெயராக வைத்துக்கொள்வார்கள். நமது முன்னோர்களின் வழித்தோன்றலில் இருந்து பரம்பரையாக வரும் நாம் நமது முதல் தலைமுறையினரை நினைவில் கொள்ளவே இந்த கோத்திரப்பெயரை விடாமல் பின்பற்றி வருகிறோம்.

வேதங்களின் படி ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் சகோதர, சகோதரி உறவுமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் மணம் புரியக் கூடாது என்கிறது. மனுதர்ம சாஸ்திரப்படியும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயக் குற்றமாக சொல்லப்பட்டிருப்பதால் அனைவருமே கோத்திரத்தை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகளை கூறுகிறார்கள். இந்து மதத்தைச் சார்ந்த அனைவருமே இந்த ஏழு ரிஷிகளின் வழியில் வந்தவர்களே என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோத்திரம் உண்டு..பிருகு, அங்க் ரஸர், அத்ரி, விஸ்வாமித்ரர், வஸிஸ்டர், கச்யபர், அகஸ்தியர் இவர்கள் தான் கோத்திரங்களுக்குரிய அந்த ஏழு ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு ரிஷிகளை கொண்டிருக்கின்றன. பொதுவாக கோத்திரம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. இவர்கள் தான் ரிஷிகளின் வழித்தோன்றலில் உருவானவர்கள் என்னும்  தவறான  எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்துமதத்தின் எல்லா மக்களுக்கும் கோத்திரம் உண்டு. 

திருமண சடங்கின் போது  ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கும் போது முதல் பொருத்தமே கோத்திர பொருத்தம் தான். இவை தவிர மற்ற பொருத்தங்கள் பிரமாதமாக இருந்தாலும் திருமணம் செய்ய மாட்டார்கள். திருமணத்துக்கு பின்பு பெண்ணுடைய கோத்திரம் மாறும்.. ஆணின் கோத்திரம்   மாறாது.

ஒருமுறை காஞ்சி பெரியவா அவர்களிடம் பக்தி கொண்ட பெற்றோர்கள் 9 வயதான ஆண்குழந்தையை அழைத்துக்கொண்டு உபநயனம் நடத்த வேண்டும் என்று சொன்னார்களாம். கூடவே பையன் அக்ரஹார பையன்.. நாங்கள் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றும் என்றார்கள்.

பெரியவா சாஸ்திர சம்பிரதாயங்களைக் கரைத்து குடித்தவர் ஆயிற்றே... ஜோதிடத்திலும் சிறந்துவிளங்கியவர் ..
பெரியவா மனசுக்குள் ஆனந்தப்பட்டு சொன்னார். ”கோத்திரம் தெரியாதவர்களுக்கு காசியப கோத்திரம், ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயான ஸூத்திரம்” என்று சொன்னாராம். 
   

இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணை எடு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close