ரமண மகரிஷியான பிராமண சுவாமி..!

  தனலக்ஷ்மி   | Last Modified : 27 Apr, 2019 12:32 am
ramana-maharishi

மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பாரதபூமி.. கணக்கிலடங்கா மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களை கண்ணால் தரிசிக்கும் பேறு கிட்டவில்லையே என்று ஏங்கிய பக்தர்களுக்கு இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களின் அருள் கிடைத் தது. அவர்களது அருளைப் பெற்ற பக்தர்கள் புண்ணியம் பல பெற்றவர்கள் என்றே சொல்லலாம்..  எண்ணற்ற மகான்களின் வரிசையில் தனித்து நின்றவர் விருது நகர் திருச்சுழியைச் சேர்ந்தவர் வேங்கடரமணன்.... அவர்கள்.. இவர்தான் பிற் காலத்தில்  ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே தன்னைத்தானே தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வத் தில் நான் யார் என்ற கேள்வியோடு  வலம் வந்தவரின் பாதம் திருவண்ணா மலையில் பட்டதுமே பதிலை உணர்ந்தவராய் மலையின் அடிவாரத்தில் அமர்ந்து விட்டார். எவ்வளவு வருடங்கள்? எவ்வளவு மாதங்கள்? எவ்வளவு நாள்கள்? உண்ணாமல், உறங்காமல்  எப்படி இருந்தார். இப்படி எண்ணற்ற கேள்விகள் இருந்தாலும்  இதற்கு பதில் சொல்ல  யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. 

எல்லோரிடமும் பேசுவாரா? புன்னகைப்பாரா? அருளுரை தருவாறா?  என்றால் அவரது மெளனமும் கருணை மிக்க ஒளிவீசும் பார்வையும் தான் பக்தர்களை வசீகரித்தது. ஒரு நாள் சுற்றி நின்ற கூட்டத்திற்கு நடுவில் அமர்ந்திருந்த மகரிஷி  மூடிய இமைகளை திறந்துபார்த்தார். ஒளி வீசிய அவரது கண்களின் பார்வையில் தங்கள் வாழ்க்கையில் ஒளி வந்துவிட்டதாக  சுற்றியிருந்த மக்கள் மகிழ்ந்தார் கள். இறைவனிடமிருந்து பெறக்கூடிய கருணை, அன்பு, அருள், ஆசிர்வாதம் என அனைத்தும் அந்நொடி கிடைத்துவிட்டதாக  ஆனந்தப்பட்டார்கள்  சுற்றியிருந்த  மக்கள்.

மக்கள் அன்போடு கொண்டு வந்த பொருள்கள்  எதுவாயினும் அன்போடு  அமை தியாக மறுத்தார்.  ஓர் அங்குல துணியில் உடலை மறைத்தவர் என்னை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தாதீர்கள் என்று மணலில் எழுதி காட்டினார்.  அவரு டைய தேகம் சிவப்பு வெள்ளையினால் மினுமினுப்பைக் கொண்டிருந்ததால் அவரை பிராமண சுவாமிகள் என்று அழைத்தார்கள். அவருக்கு பணிவிடை செய்த அன்பர் காவ்ய கண்ட கணபதி முனி ஒருமுறை  இவரைக் கண்டு ரமண மகரிஷி என்று அன்போடு அழைக்க புன்னகையோடு பார்த்தார் குரு.. அவருடைய புன்னகையும், அமைதியையும் சம்மதமாக எடுத்துக்கொண்ட பக்தர்கள்  பிரா மண சுவாமிகள் என்னும் பெயரை மறந்து  ரமண மகரிஷி என்று அழைக் கப்பட்டார்.

மெளனமாக இருப்பது மிகவும் நல்லது. மிகவும் சிறந்ததும் கூட. ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனத்தை அலைபாயவிட்டால் அது மெளனமாகாது பலனும் கிடையாது என்று பக்தர்களுக்கு உணரவைத்தவர் இவர்.  கடவுளை அறிந்துகொள்வதற்கு முன்பு உன்னை அறிந்துக்கொள்  நான் என்று சொல்லும் ஆத்மா எங்கே  உள்ளது என்று தேடு என்று வழிகாட்டிய மகான் ரமண மகரிஷி.. இவரது அன்பையும் அருளையும் மானசீகமாக பெற   இவர் காட்டிய மெளன வழியில் பயணித்தால் மட்டுமே முடியும் என்கிறார்கள் ரமண  பக்தர்கள்.... 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close