அடுத்த நாழிகை உயிரோடு இருப்போமா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 27 Apr, 2019 03:58 pm
will-the-next-hour-be-alive

நடந்ததை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை... ஏனெனில் அதை மாற்ற முடியாதது.  நாளை நடக்கவிருப்பதை பற்றிய எதிர்பார்ப்பும் வேண்டாம்.  அதை முடிவு செய்யும் உரிமை நம்மிடம் இல்லை.  நடக்கும் இந்த நிமிடம் தான் நிஜம். இதை உணர்ந்தவர்கள் எல்லோரும் ஞானிகள்பஞ்ச பாண்டவர்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வு இது.

பஞ்ச பாண்டவர்கள் அரண்மனையில் இருந்த போது யாசகம் கேட்டு ஒருவன் வந்திருந்தான்அப்போது தருமர் முக்கியமான பணியில் இருந்தார். அவருக்கு தர்மம் செய்ய ஆசை இருந்தாலும் அந்த வேலையை விட்டு வர முடியவில்லைஅதனால் யாசகம் கேட்டு வந்தவனிடம்இப்போது என்னால் முடியாது.. நான் உனக்கு உதவிட விரும்புகிறேன்.  அதனால் நாளை வா” என்று திருப்பி அனுப்பினார்.

யாசகம் கேட்டு வந்தவன் மகிழ்ச்சியோடு அப்படியே ஆகட்டும் தர்மபிரபு என்று சொல்லிவிட்டு சென்றான். நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்  பீமன். என்ன செய்யலாம் என்று யோசித்தவன் உடனடியாக ஒரு முரசை எடுத்துகொண்டு ஊர் மக்களை நோக்கி ஓடினான். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தவன் முரசை கொட்டியபடி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அது என்னவென்றால்…என் சகோதரர் காலத்தை வென்று சாதனை படைத்துவிட்டார்”  என்று கூறியபடி முரசு கொட்டினான்.

வழக்கமாக அரண்மனை பணியாள்கள் செய்ய வேண்டிய பணியை  பீமனே வந்து செய்வதால் ஊர் முழுக்க பீமன் முரசு கொட்டும் விஷயம் பரவிற்றுதர்மருக்கு சங்கடமாகிவிட்டது. பீமனை அழைத்துஎன்ன செய்கிறாய் பீமா?” என்று கேட் டார். ”எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதண்ணா.. நீங்கள் காலத்தை வென்று விட்டீர்களே” என்றான்.. அப்போதும் தர்மருக்கு குழப்பமே. ”தெளிவாக சொல்லேன் என்றார்.

பீமன் நிதானமாக விளக்கினான். ”இன்று யாசகம் கேட்டு ஒருவர் வந்தாரல்லவா, அவரை நீங்கள் நாளைக்கு வரச்சொல்லி இருக்கிறீர்கள்நீங்கள் நாளை உயிரோடு இருப்பீர்களா? நீங்கள் உயிரோடு இருந்தால்  அவர் நாளை உயிரோடு  இருப்பாரா? அப்படியே இருந்தாலும்  நாளை உங்களிடம் உதவி செய்ய பொருள் இருக்குமா? பொருள் இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் மனநிலை இருக்குமா? நாளையும் யாசகம் கேட்கும் மனநிலையில் அவன் இருப்பானா? இருவரும் நாளை சந்திக்க சித்ரகுப்தன் நேரம் கொடுத்திருக்காரா? இதெல்லாமே சாத்தியமாக நடக்கும் என்பதால் நீங்கள் காலத்தை வென்றவராகிவிட்டீர்.. சரிதானே.. நான் போய் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றான். இல்லையென்றால் அடுத்த நாழிகை எனக்கு கிடைக்குமோ என்னவோ” என்று வேகமாக கிளம்பினான்.

தர்மருக்கு தன்னுடைய தவறு புரிந்துவிட்டது. ”தம்பி. பீமா கொஞ்சம் பொறு நான் தவறு புரிந்துவிட்டேன். நான் யாசகம் கேட்டு வந்தவனிடம் அவ்வாறு சொன்னது தவறுதான்முக்காலமும் உணர்ந்த ஞானியால் தான் இத்தகைய வாக்குறு தியைக் கொடுக்க முடியும்” என்று கூறிய தர்மர் உடனடியாக யாசகம் கேட்டு வந்தவனை வரவழைத்து உதவி செய்து அனுப்பினார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்லதை செய்ய வேண்டும் என்று நினைப்பதை அக்கணமே செய்துவிட வேண்டும். அடுத்த நாழிகையில் மனம்  மாறாது என்பதற்கும்நாம் உயிரோடு இருப்போம் என்பதற்கும் என்ன  உத்திரவாதம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close