பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனா ஸ்ரீ கிருஷ்ணன்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 05 May, 2019 03:19 pm
sri-krishna-is-interested-in-women

கிருஷ்ணா என்று அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவான் செல்லக் கண்ணன். தன்னை தானே தாழ்த்திக் கொண்டு காண்பிப்பது கிருஷ்ணனுக்கே உரிய குணம் என்றாலும் தன்னிடம் அபயம் வேண்டி வருபவர்களை உச்சாணிக்கொம்பில் அமரவைத்துவிடுவார்.
ஞானிகள் சொல்வதை ஆராயாமல் கேட்கும் மனப்பக்குவத்துக்கு நாம் வர வேண்டும். பகவானின் அடியார்களுக்குச் செய்யும் பணிவிடைகள் எனக்கு செய்த பணிவிடைகள் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஆன்மிக ஞானம் என்பது மனதில் இருக்கும் இருளை வெளியேற்றி உள்ளுக்குள் ஒளியேற்றி இறைவனை அறிந்துகொள்வது. வாழ்வில் இதை உணர்ந்துகொள்ள பக்தர்கள் முயற்சிக்க வேண்டும். இறைவனின் அவதாரங்களில் ஏன் இத்தனை பாகுபாடு. காக்கும் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா அவதாரங்களிலும் ஒரே மாதிரி இல்லையே.. நேர்மைக்கு இலக்கணமாக  ஸ்ரீ இராமனாக அவதரித்து உதாரண புருஷராய் வாழ்ந்தவர் ஸ்ரீ இராமபிரான்.

இராமாயணத்தில் சூழ்ச்சியால் எதிரிகளை வீழ்த்தலாம் என்று கற்றுதந்தவர் ஸ்ரீ கண்ணபிரான். இது மகாபாரதம். ஆனால்  இதில்  சூழ்ச்சி என்பது தவறான வழிகாட்டுதல் அல்ல. சூழ்ச்சியை அழிப்பதற்காக சூழ்ச்சியால்  கையாளப்பட்டது. இதனால் கிருஷ்ணபரமாத்மா தனக்கேற்பட்ட  மான அவமானங்களையெல்லாம் தாங்கிக்கொண்டார்.
 

அர்ஜூனனுக்கு மரியாதை வழங்கினார். தர்மருக்கு இராஜ்ஜியம் மீட்டு கொடுத்தார். கம்சனின் சிறையில் துன்பத்தை அனுபவித்த உக்கிரசேனனுக்கு விடுதலை பெற்று தந்து ராஜபரிபாலனம் செய்ய சொல்லி கெளரவப்படுத்தினார். அதனால்தான் மானம் காத்தவன். மரியாதஷ்கொடுத்தவன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை சொல்கிறார்கள். இப்படி அண்டியவர்களுக்கெல்லாம் வாரி கொடுத்த வள்ளல் ஸ்ரீ கிருஷ்ணன் சாதாரண மானிடனல்ல. காக்கும் கடவுள். ஸ்ரீ கிருஷ்ணனின் தோளில்  கால் வைத்துதான் அர்ஜூனன் தேரில் ஏறினான். இறங்கினான். இதை விட ஒருவர் தன்னை தாழ்த்திகொள்ள முடியுமா?

ஸ்ரீகிருஷ்ணரை பொய்யன் என்று அழைத்தார்கள். விஷமக்காரன், தந்திரக்காரன் என்றும் சொன்னார்கள். பெண்களிடம் ஈடுபாடு கொண்ட குறும்புக்காரன் என்றும் கூட அழைத்தார்கள். பாண்டவனுக்காக தூது போன சாதாரணமானவன் என்று இகழ்ந்தார்கள். ஆனாலும் அனைத்தையும் புன்னகையோடு வாங்கிக்கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர். எந்த சூழ்நிலையிலும் தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

தன்னுடைய மான அவமானங்களைப் பற்றி கவலைப்படவுமில்லை. எல்லா தருணங்களிலும் தன்னுடைய அவதாரத்தின் பொருட்டு அதை நிறைவேற்றுவதிலும் பொறுப்புடன் செயல்பட்டார். அதனால்தான் மாயக்கண்ணன் நம்மை மயக்கிவிட்டான் போலும். எங்கு ஸ்ரீ கிருஷ்ணர்.. பெயரை கேட்டாலும் மனம் முழுக்க உற்சாகமும் அவன்  செய்யும் குறும்புத்தனமும் நமக்கு புன்னகையையும், அவன் பால் பக்தியையும் உண்டாக்குகிறது. ஹரே கிருஷ்ணா…


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close