வாயிலார் நாயனார்

  தனலக்ஷ்மி   | Last Modified : 13 Aug, 2019 04:03 pm
devotional

சைவ சமயத்தவர்களால் பெரிதும் போற்றத்தக்க 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனாரும் ஒருவர். தொண்டை நாடு என்றழைக்கப்படும் சென்னை மாநகரில் மயிலாப்பூரில் பிறந்தவர் இவர். இவரைப்பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கப்பெறவில்லை. திருத்தொண்ட தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் என்று கூறியிருப்பதால் இவரது காலம் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு என்பதை அறீயலாம்.

இங்கு எழுந்தருளியிருக்கு இறைவன் கபாலீஸ்வரர், இறைவி கற்பகாம்பாளை நினைத்து வாழும் அரிய பேறைக் கொண்டிருந்த வாயிலார் வேளாளர் மர பிலே தோன்றினார். எம்பெருமானை மனதில் நினைத்து பூஜித்து இறைவனை மனக்கோயிலில் நிறுத்தி வழிபட்டார். உணர்வால் எம்பெருமானுக்கு தூய விளக்கேற்றினார்.

சிவபெருமானுக்கு மனத்திலேயே  திருகோவில் அமைத்து திருமஞ்சனம் தூபதீபம் செய்து வந்தார் வேளாளர். உலகில்இன்பம் என்பது எம்பெருமானின் திருவடியைப் பற்றி இருப்பது ஒன்று மட்டுமே என்பதை உணர்ந்து தொழுது எதுவும் பேசாமல் இறைவனை மட்டுமே நிறுத்தி இறுதியில் இறைவன் பாதம் சரணடைந்தார். 

வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close