பிள்ளையார் சுழி போடுவது எதற்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 11:06 pm
the-reason-bihind-pillayar-suli

சிவ சக்தியின் இணைப்பு பிள்ளையார். எந்த செயலை செய்யத் தொடங்கும் முன்,பிள்ளையார் சுழி எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழி ஒரு வட்டமும், ஒரு கோடும் இணந்து 'உ' என்று எழுதுவார்கள். 

இதற்கு ஒரு தத்துவம் உண்டு, வட்டத்தை பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டினை,நாதம் என்றும் கொள்கின்றனர். 
எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். 

பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக கூறப்படுகின்றது. சிவனும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர வடிவமாய் காட்சியளித்து, இவ்வுலகில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்துகின்றனர். 

அந்த நாதன், நாயகியின் மகனான விநாயகர், தன்னை குறிக்கும் குறியீடான பிள்ளையார் சுழியிலேயே இந்த தத்துவத்தை உணர்த்துகிறார். எந்த செயலை துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு அதை துவங்கினால், செய்யும் செயலில் நான் என்ற மமதை இருக்காது.

கடவுளின் படைப்பின் அனைத்தும் சமம் என்ற எண்ணம் தோன்றுவதால் அச்செயல் இனிதே நிறைவடையும். இதனால் தான் பிள்ளையார் சுழி போட்டு அனைத்தையும் துவங்க சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close