சாய்பாபாவிற்கான விரத முறைகள்

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 09:48 am
fasting-methods-for-saibaba

இதுவரை சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் பக்தர்களுக்கு செய்த அற்புதங்களில் சிறிதளவே நாம் கண்டோம். சாய்பாபா செய்த அற்புதங்களும், ஆசீர்வாதகளும் இன்னும் ஏராளம். இனி வரபோகும் பகுதியில் அதனை காண்போம். ஆனால், இப்போது சாய்பாபாவிற்காக நாம் இருக்கும் விரத முறைகளை பற்றி விரிவாக காணலாம்.

சாய்பாபாவை  நாம்  குருவாக ஏற்று வழிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ”குரு” (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது.  இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

* இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.

* இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது . 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

* விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும்,  சாய்பாபாவின் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

* காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா படத்தை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய்பாபா விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை பூஜை செய்து நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும் ) பிரசாதத்தை விநியோகிக்கவும்.

* இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால் ,டீ, காபி பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ ,இரவோ ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 

வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால் வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி ,சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம்.

விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாவே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து  9  வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

விரத நிறைவு விதி முறைகள்

1. 9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ ,உணவு பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.

2.  9-ஆவது வியாழக்கிழமை மேற்கூறிய விதிமுறைகளின் படி, விரதமும் விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாய்பாபாவின் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
                                                                                                     ஓம் ஸ்ரீ சாய் ராம்!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close