பக்தனின் ஆசை

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 09:45 pm
the-desire-of-the-devotee

லட்சுமண் கோவிந்த் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் நாசிக்கில் வசித்து வந்தார். அவனுக்குத் திருமணம் செய்து கொள்ளும் ஆசை ஏற்பட்டது. ஆனால், அதற்குப் பணம் நிறைய செலவாகுமே, அதற்கு என்ன செய்வது என்ற கவலையும் தோன்றியது. ரஹாதா என்னும் கிராமத்தில் வசித்துவந்த அவனது மாமாவைப் பார்த்து பண உதவி கேட்க நினைத்து அங்கு வந்தான். அங்குள்ள மாருதி கோயிலைத் தாண்டி அவன் நடந்து கொண்டிருந்தான். 

அப்போது ரஹாதா வந்திருந்த சாய்பாபா, அக்கோயில் வாசலில் அமர்ந்திருந்தார். அவரைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திராத சமயம் அது. ஆகவே, பலரும் அவரை ஒரு சாதாரண சாமியார் என்றே கருதினர். லட்சுமண் கோவிந்தும் அப்படியே. ஆனால்,  சாய்பாபா அவனைக் கூப்பிட்டார். யார் இந்த ஃபக்கீர் ! எதற்காகத் தன்னை அழைக்கிறார்?  என்ற யோசனையுடனேயே அவர் அருகே வந்தான் கோவிந்த். 

நேற்று முழுவதும் உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்னவென்றால் என்னைப் பார்க்காமலேயே போய்க் கொண்டிருக்கிறாயே சரி, எதற்காக ரஹாதா வந்திருக்கிறாய்? என்று கேட்டார். தன் திருமணத்திற்குப் பணம் தேவைப்படுவதைப் பற்றி அவன் கூறினான்.

"ஆயிரமோ, இரண்டாயிரமோ போதுமா?" என்று சாதாரணமாகக் கேட்டார் சாய்பாபா. அவனுக்கு, இந்தப் ஃபக்கீர் மீது நம்பிக்கை வரவில்லை. இவ்வளவு பணத்தை இவரால் எப்படிக் கொடுக்க முடியும் என்று சந்தேகப்பட்டான். சாய்பாபா சொன்னார் "கவலைப்படாமல் நாசிக்கிற்குப் போ. எல்லாம் நல்ல படியாக நடக்கும்" 

அப்புறம் தான் அவனுக்குத் தெரியவந்தது அவர். சாய்பாபா என்பது. அவர் ஆணைப்படியே நாசிக்கிற்குச் சென்றான். அங்கு அவனுக்குத் தெரிந்த சிலரிடம் கடன் கேட்டான். அப்போது ஒரு மார்வாடி எதுவும் மறுப்புத் தெரிவிக்காமல் அவன் கேட்ட தொகையைக் கடனாகக் கொடுத்தார்.

இது சாய்பாபாவின் அனுசரணையால் தான் கிடைத்தது என்பதைப் புரிந்துகொண்டான். எனவே, தனக்கு திருமணம் முடிந்ததும், தனது புது மனைவியுடன் ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டான் .
.                                                                                                                 ஓம் ஸ்ரீ சாய்ராம்


 டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close