சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்- பாகம் 2

  varun   | Last Modified : 17 Oct, 2016 03:41 pm

தற்காலத்தில் நிகழும் கியாஸ் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் குறைவுகள். எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும். * பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்களை சமையல் அறைக்குள் வைக்க கூடாது. ஏனெனில் மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்துகிறது. * சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும். * திடீரென கியாஸ் கசிவுகள் ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் மின் சுவிட்சுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும். * கியாஸ் டியூப்பில் விரிசல்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close