24 மணிநேர இலவச 'ஒயின் ஊற்று'

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தண்ணீருக்கே நம்மவர்கள் அடித்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், இத்தாலியில் இலவச ஒயின் ஊற்று ஒன்று மக்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது. டோரா சார்சேஸ் எனும் திராட்சை தோட்டம், ஒயின் தயாரிப்பதில் மிகப் பிரபலம். பல பகுதிகளில் மக்களுக்காக குடிநீர் ஊற்றுகள் அமைக்கப்பட்டிருப்பது போல் அவர்கள் தங்களின் தோட்டத்தில் 24 மணி நேர இலவச 'ரெட் ஒயின்' ஊற்று ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இதுபற்றி தோட்டத்தின் உரிமையாளர்கள், "இதில் எந்த ஒரு உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. அதேபோல் இது குடிகாரர்களுக்காகவும் உருவாக்கப் பட்டது இல்லை," என தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close