குறும்பு செய்யும் குழந்தைகளை அடிக்கலாமா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு பெற்றோர் அன்பாக புரிய வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அடிக்க கூடாது. சின்ன குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும், குறும்புகளையும் நாம் ரசிக்கத் தான் செய்வோம், ஆனால் ஒருசில நேரங்களில் அவர்களது குறும்புத்தனம் அளவு மீறி செல்லும் போது அடிக்கக்கூட செய்வோம். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுதனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் சில ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது, அதை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தினமும் பெற்றோர்களுடைய ஆலோசனைகள் தேவை. அவர்களுக்கு புரிவது போல் விளையாட்டுத்தனமாக சொல்லித் தர வேண்டும். அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்கலாம், இப்படி செய்வது தவறு என்று நல்லது, கெட்டதை புரிய வைக்க வேண்டும். ஆனால் குழந்தைகள் அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாத போது அவர்களை அடித்து துன்புறுத்துவது மிகவும் தவறான விஷயம். குழந்தைகளை தண்டிப்பது, மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக நிச்சயம் வலம் வருவார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close