சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?

  gobinath   | Last Modified : 26 Oct, 2016 12:10 pm
தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள், ஆனால், சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர் ஒருவர் வைத்திருந்திருக்கிறார். அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார். தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியின் வரலாற்றுக்கு சொந்தக்காரரான இந்த நம்பெருமாள் செட்டியார், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கியவர். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. 18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான பில்டிங் காண்ட்ராக்டராக இருந்த இவர் வாழ்ந்த வீடு ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர்.மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது.இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இவரது பெயரையே இன்று, ‘சேட்பட்’ தாங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close