தீபாவளி ஸ்பெஷல்: மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

  varun   | Last Modified : 27 Oct, 2016 04:20 pm
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது சிறப்பு என்றாலும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் நோய்வாய்ப் பட்டவர்களும், விலங்குகளும், முதியவர்களும் அனுபவிக்கும் கஷ்டங்களையும் நினைத்து பார்க்க வேண்டும். தீபாவளி பண்டிகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் இதோ: * தரமான பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். * பட்டாசு பெட்டிகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும் நெருப்பு எளிதில் பற்ற கூடிய இடங்களில் பட்டாசுகளை அவசியம் வைக்க கூடாது. * பட்டாசு வெடிக்கும் போது ஒவ்வொன்றாய் பெட்டியிலிருந்து எடுத்து வெடிக்க வேண்டும். முடிந்தால் பட்டாசு மருந்து கைகளில் படாமல் இருக்க கையுறை அணிய வேண்டும். * பற்ற வைக்கப்பட்ட பட்டாசுகள் அணைந்து விடின் அவற்றின் அருகில் சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும். * குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவசியம் அவர்களோடு பெரியவர்கள் இருந்து கண்காணிக்க வேண்டும். * வெடிகளை கொளுத்துகையில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மிரள்வதைத் தவிர்க்க அவற்றை வீட்டினுள் அடைத்து, கதவு- ஜன்னல்களை சாத்த வேண்டும். * அதே போல் வயதானவர்கள், இதய நோயாளிகள் ஆகியோர் முன் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசுகளை பாதுகாப்பாக மைதானத்திலோ, ஒதுக்குப்புறமான இடத்திலோ வைத்து வெடிக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close