தீபாவளி லட்சுமி பூஜை விதிமுறைகள்!

  shriram   | Last Modified : 27 Oct, 2016 03:52 pm
பூஜை செய்யும் முறை: லட்சுமி மற்றும் விநாயகரை வைத்து பூஜை செய்வது தீபாவளியின் சிறப்பு. பூஜைக்கு தேவையான பொருட்கள்: லட்சுமி, விநாயகர் சிலைகள். கலசம், தேன், நெய், பால், தயிர், அரிசி பொறி, மல்லி விதைகள், வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள் உள்ளிட்டவை. இதுபோக குங்குமம், பத்தி, மஞ்சள், பூக்கள் போன்ற பூஜை சாமான்களும் வேண்டும். லட்சுமிதேவி மற்றும் விநாயகர் மீது மஞ்சளை தடவ வேண்டும். கலசத்தில் மாவிலைகளை கொண்டு தண்ணீர் நிரப்ப வேண்டும். பின்னர் விளக்கேற்றி, லட்சுமி தேவியை நெய், பால், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின் புனித நீரால் கழுவ வேண்டும். கழுவி முடித்தபின் சுத்தமான துணியால் லட்சுமியை துடைத்து, மஞ்சள், குங்குமம் இட வேண்டும். இதையே விநாயகர் சிலைக்கும் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்த பின் பூக்களையும் அரிசியையும் வைத்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்தால் தேவியின் அருள் வீடெங்கும் பரவும். இந்த பூஜையின்போது புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றையும் அருகில் வைத்து அருள் பெறலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close