தங்கத்திற்கு மதிப்பு கிடைத்தது எப்படி?

  jerome   | Last Modified : 14 Nov, 2016 09:18 pm

எத்தனையோ உலோகங்கள் இருக்கும்போது தங்கம் மற்றும் வெள்ளிக்கு மட்டும் எப்போதுமே மதிப்பு அதிகம் தான். ஆரம்பகாலத்தில் மிளிரும் தன்மை உடைய உலோகங்கள் மீது மனிதன் ஆர்வமாய் இருந்தான். இதில், தங்கம், வெள்ளியை தவிர்த்து மிளிரக்கூடிய பல்லாடியம், பிளாட்டினம், ரோடியம், இரிடியம், ருதேனியம் போன்ற உலோகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. மேலும், அவற்றை பிரித்தெடுப்பதும், உருக்கி பிற வடிவமாக மாற்றி அமைப்பதும் எளிதாக இல்லை. அக்காலத்தில் வெள்ளி அதிகமாக கிடைத்ததால் அதன் மதிப்பு குறைந்து தங்கம் முதன்மை இடத்திற்கு வந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close