காய்கறிகளை வாங்குவது எப்படி? - பாகம் 1

  varun   | Last Modified : 15 Nov, 2016 11:30 am
என்னென்ன காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என அறிந்திருப்பது அவசியம். காய்கறி வாங்க செல்பவர்களின் கவனத்திற்கு சில பயனுள்ள தகவல்கள்... 1. வாழை தண்டு வாங்கும் போது மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயமானது நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும். 3. முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய் என்று அர்த்தம். 4. சர்க்கரை வள்ளிக்கிழங்கு உறுதியாய் இருந்தால் இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும். 5. இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.நல்ல சிவப்பான நிறத்தில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம். 7. கோவைக்காய் முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். ஏனென்றால் அவை பழுத்து ருசி இல்லாமல் இருக்கும். 8. குடை மிளகாய் வாங்கும் போது தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் இருந்தால் அவை அடிபட்டிருக்கும் என்பதால் வாங்கவேண்டாம். 9. காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close