காய்கறிகளை வாங்குவது எப்படி? - பாகம் 2

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சந்தையில் நேர்த்தியான காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதே ஒரு தனி கலை என்று சொல்லலாம். காய்கறிகளை திறம்பட வாங்க முன்பு கூறிய குறிப்புகளின் தொடர்ச்சி இதோ: * மாங்காய் வாங்கும் முன், அவற்றை தட்டி பார்க்கவும். சத்தம் வருமாயின் அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும். * பீர்க்கங்காயின் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது. * பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக இருக்குமாறு பார்த்து வாங்கவும். * கெட்டியான புடலங்காயாய் பார்த்து வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாகவும் சதை பகுதி அதிகமாகவும் இருக்கும். * நல்ல உருளை கிழங்கு என்றால் முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும். * கருணை கிழங்கை முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும். * சேப்பங்கிழங்குகளில் முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும். * பெரிய வெங்காயம் மேல் பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். * இஞ்சியினை லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. அதோடு நார் பகுதி குறைவாகவும் இருக்க வேண்டும். * தோல் மென்மையாய் இருப்பதுபோல் கத்திரிக்காயை பார்த்து வாங்கவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close