இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்!!

  நந்தினி   | Last Modified : 17 Nov, 2016 03:22 pm
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை வளர்க்க ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் 5-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வண்ணம், அகில சர்வதேச சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று 1995ல் ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 1996ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 16ம் தேதி சர்வதேச சகிப்புத்தன்மை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை இல்லாததால், ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கிலும் இத்தினம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மனிதகுலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத்தன்மை நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் (நவ.16) நினைவுகூருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close