காய்கறிகளை வாங்குவது எப்படி? - பாகம் 3

  varun   | Last Modified : 17 Nov, 2016 12:10 pm

நோயற்ற வாழ்விற்கு ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது அவசியம். அத்தகைய ஆரோக்கிய உணவுப் பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கான குறிப்புகளின் தொடர்ச்சி: * சுரைக்காயை நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம். * பூண்டினுடைய பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. அவற்றை தைரியமாய் வாங்கலாம். * பிரெஞ்சு பீன்ஸின் தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும். * அவரைக்காயை தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது. * பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது. * வாழைப்பூவின் மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் பிரெஷ்ஷான காய் என்று அர்த்தம். * மொச்சையினது கொட்டை பெரிதாக தெரியும்படி பார்த்து வாங்கவும். * சௌசௌவின் வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் அது முற்றிய காயாம். * முள்ளங்கியினை லேசாக கீறினால் அதன் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய் ஆகும். * வெள்ளரியினை மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய் என்றும் விதைகள் குறைவாக இருக்கும் என்றும் அர்த்தம். * பச்சை மிளகாய்களில் நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.