2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான்!

  gobinath   | Last Modified : 18 Nov, 2016 10:51 am
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது வாடிக்கை. அந்த வகையில், இந்த ஆண்டு post-truth என்பதை சிறந்த வார்த்தையாக அது தேர்ந்தெடுத்துள்ளது. மேலும், “பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது" என்று அந்த வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் விளக்கம் அளித்துள்ளது. சிறந்த வார்த்தை என்று வரும் போது குறிப்பாக ஆக்ஸ்போர்ட் அகராதியின் பிரிட்டன் மற்றும் அமெரிக்க பாதிப்புகள் வேறு வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, இரண்டு பதிப்புகளும் ஒரே வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளன. இதற்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்த வார்த்தை பயன்பாடு உலக அளவில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் அகராதி விளக்கம் கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close