எதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர்!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் முன்னோர்கள் நாம் நினைத்ததை விட அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி வந்தது சமீபத்திய ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. கிமு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மிகவும் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிமு 60களில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படும் இந்த கம்ப்யூட்டர் வானியல் கால்குலேட்டர் போன்று செயல்பட்டுள்ளது. கிரேக்கர்கள் இந்த கம்ப்யூட்டர் மூலம் அவர்கள் எதிர்காலத்தை கணித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் அனலாக் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அன்டிகைதிரா (Antikythera) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது. கிரேக்க தீவு ஒன்றின் அருகில் உடைந்திருந்த கப்பலில் கண்டெடுக்கப்பட்ட இதை ஆராய்ச்சியாளர்கள் எக்ஸ்-ரே இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஒன்றிணைத்துள்ளனர். இதை ஆய்வு செய்த, கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் மைக்கேல் எட்மண்ட்ஸ் "இது கிரேக்க ஆராய்ச்சியாளர்களால் சுமார் கிமு 150 மற்றும் 100 காலக்கட்டத்தில் வடிவமைத்து, நிறங்களை ஒருவித சிக்னல் போன்று பயன்படுத்தி கிரகணங்களை கணித்திருக்கலாம் என்றும் வானியல் தவிர்த்து ஜோதிடம் கணிக்க பயன்படுத்தப்பட்ட முதல் இயந்திர நுட்ப முறையாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். அன்டிகைதிரா இயந்திர நுட்ப முறையானது வெண்கலத்தால் செய்யப்பட்ட சுமார் 30 துணைக்கருவிகளை கொண்டுள்ளது. மேலும் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக அன்டிகைதிரா இயந்திரம் ஏதென்ஸ் நாட்டு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. (படம்- AFP)

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.