நான்கு கோடிக்கு ஏலம் போகும் பறவையின் எலும்புக்கூடு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த பறவை "டூடூ" (Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. மொரீஷியஸ் தீவை பூர்வீகமாகக் கொண்ட டூடூ சுமார் 3 அடி முதல் 6 அடி உயரத்துடனும், எடை சுமார் 10 லிருந்து 20 கிலோ வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. 1507 - ஆம் ஆண்டில் இந்தத் தீவுக்கு வந்த போர்த்துகீசியர்கள் தான் டூடூ எனப்பெயரிட்டுள்ளனர். டூடூ என்றால் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என அர்த்தம். மிகவும் சாதுவான இந்த பறவை எளிதில் அகப்பட்டுக்கொள்ளும். அதுவே, இதன் அழிவிற்கு முக்கிய காரணம். மனிதர்கள் கண்ணில்பட்டு அதிகபட்சம் 100-150 ஆண்டுகளுக்குத்தான் அவற்றால் உயிர் பிழைத்திருக்க முடிந்தது. மொரீஷியஸில் இருந்த கல்வாரியா என்னும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவு. டூடூ இப்பழத்தைச் சுவைத்த பிறகு, அதன் கழிவுடன் வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். டூடூ அழிந்ததால் கல்வாரியா மரமும் அழிந்துபோய்விட்டது. ஒரு உயிரினத்தின் அழிவு, சங்கிலித் தொடராக அது சார்ந்துள்ள மற்ற உயிரினங்களின் அழிவாகவும் மாறுவதை இதிலிருந்து உணரலாம். பிரிட்டனில் ஏறத்தாழ முழுவதுமாக நிறைவுபெற்ற டூடூ பறவையின் எலும்புக்கூடு, இம்மாத இறுதியில் ஏலத்திற்கு வருகிறது. 2 முதல் 4 கோடி வரை விலைபோகும் என்று கருதப்படுகின்றது. மொரீஷியஸ் அரசின் தேசிய சின்னம் இந்த "டூடூ" பறவைதான்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.