5000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் காலநிலைக்கேற்ப விவசாயம்!!

  jerome   | Last Modified : 22 Nov, 2016 07:37 pm

அரிசியை முதலில் கண்டறிந்தவர்கள் சீனர்கள் என்று கருதிவந்த தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்திற்கு, மாற்று தீர்வொன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்த சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றிய தொல்பொருள் ஆய்வுகள் 2008-ல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம், கி.மு 2430-2140 காலகட்டத்திலேயே இந்தியாவில் அரிசி விளைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமன்றி, சிந்து சமவெளி நாகரீக மக்கள் கோடைகால விவசாயம், மழைக்கால விவசாயம் என காலநிலைக்கேற்றவாறு விவசாயம் செய்வதில் சிறந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 40 ஆயிரம் மக்களை கொண்டதாகக் கருதப்படும் இந்நாகரீகம் அரிசி, தினை, கொள்ளு மற்றும் குளிர் கால பயிர்களை வாணிபம் செய்ததிலும் சிறப்புடன் இருந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close